பாத்ரூம் பாத்ரூம்
என் குடும்பத்தினர் அனைவரும் வட இந்தியாவை பார்ப்பதற்கு முதல் முறையாக பயணித்தோம். என் அம்மா ரயிலில் அமர்ந்த உடன் சக பயணி களிடம் சரளமாக ஹிந்தியில் பேசலானார். அதை பார்த்த எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷ மாகவும் இருந்தது. அந்த நிமிடமே டெல்லியில் விசாறிப்பதற்கு, பொருள் வாங்குவதற்கு அம்மாவைத்தான் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நாங்கள் இன்று என்ன செய்வது நாளை என்ன செய்வது என்று பட்டியலிட்டுக் கொண்டோம். நாங்கள் உறவினர் வீட்டில் தங்கினோம். அவரது வீட்டில் இரண்டு குளியல் அறை இருந்தும் ஒன்று உபயோகபடுத்தும் நிலையில் இல்லாததால் சரி செய்வதற்கு ஒருவரை அழைத்திருந்தோம். அன்று நாங்கள் ஆக்ராவை சுற்றுவதற்காக ஒரு கார் ஏற்பாடு செய்திருந்தோம். அதி காலை நான்கு மணிக்கு ஓட்டுனர் வந்து கதவை தட்டிய பொழுது, என் அம்மா அவர் யார் என்று கேட்டார். அவர் ஆங்கிலம் தெரியாததால் தான் கார் ஒட்டுனர் என்றும், 'பாத்ரூம்' உபயோகப் படுத்தவேண்டும் என்று ஹிந்தியில் கூறினார். அம்மா அவர் 'பாத்ரூம்' சரி செய்வதற்காக வந்திருக்கிரார் என்று தவறுதலாக புரிந்து கொண்டு, ஹிந்தியில், இன்று வேண்டாம் நாளை வரவும் என்றார். அவர் விடாப்பிடியாக 'பாத்ரூம் பாத்ரூம்' என்று இப்பொழுது சிறிது கத்தவே செய்தார். அம்மாவும் விடாமல் நாளைக்கு பார்த்துக்கலாம் என்று ஹிந்தியில் கூற, பின் என் அண்ணி அவரிடம் விசாரித்த பிறகுதான் எங்க ளுக்கு புரிந்தது அவர் அவசர தேவைக் காக, 'பாத்ரூம்' என்று கூறினார் என்று. சிறிது நேரம் அங்கே ஒரே சிரிப்பொலி தான், அம்மாவும் அனைவரும்.

தாமரை

© TamilOnline.com