Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சமயம் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சிகா கோவில் பெருவிழா
தமிழ் இணையம் 2002
காசு மேல காசு - தமிழ் நகைச்சுவை நாடகம்
- |ஜூலை 2002|
Share:
Click Here EnlargeNaatak, வளைகுடா பகுதி இந்திய நாடக ரசிகர்களுக்கு மிகவும் பிரசித்தமான பெயர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய நாடகக் கலையில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற தாகத்துடன், கட்டுக்கடங்கா கலையார்வம் கொண்ட இரண்டு இளைஞர் களால் தொடங்கப்பட்டக் கலைக்கூடம் - Naatak. வளைகுடா பகுதி வாழ் இந்தியர்களுக்கு அவர்களைச் சார்ந்த, வித்தியாசமான, சிந்திக்க வைக்கும் நாடகங்களை இந்திய மொழிகளில் தருவது தான் இந்த கலைக்கூடத்தின் குறிக்கோள். Naatak கருத்தரித்த நாள் முதல் இன்று வரை அதன் குடையின் கீழ் படைக்கப்பட்ட படைப்புகளின் எண்ணிக்கை - ஒன்பது மேடை நாடகங்கள் மற்றும் இரண்டு திரைப்படங்கள். நாட்டக்கின் மேடை நாடகங் களின் தரத்தைப் பற்றி வளைகுடா பகுதி நாடக அபிமானிகள் நன்கு அறிவர்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற சிந்தனை யுடன் செயல்படும் நம் தமிழ் அன்பர்கள், சங்கம் வளர்த்த முத்தமிழில் ஒன்றான நாடகத்தமிழை விட்டுவிடுவார்களா? பல்வேறு மொழிகள் பேசும் நம் இந்திய சகோதர, சகோதரிகள் வாழும் வளைகுடா பகுதியில், முதன் முதலில் ஹிந்தி அல்லாத இந்தியமொழியில் Naatak மேடை ஏறியது, நம் தமிழில் தான். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நாட்டக்கின் தமிழ்ப் பிரிவு, தங்களது முதல் தமிழ் நாடகமான கலவரத்தை மேடையேற்றியது. கலவரம், நமது சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை வேடிக்கையாகச் சுட்டிக் காட்டியது. இந்த நாடகத்தின் கலைஞர்கர் களின் செயலாற்றலும், அற்புதமான மேடை வடிவமைப்பும், நாடகத்திற்கு வந்தவர்களிடம் மிகுந்த பாராட்டுதலைப் பெற்றது.

கலவரத்தைப் பற்றி சில வரிகள். நமது தென்றலின், செப்டம்பர் 2001 இதழில் அந்த நாடகத்தைப் பற்றி எழுதிய விமர்சனத்தில் "...ஆக மொத்தம், சென்னையிலிருக்கும், தொழில்ரீதியான நாடகக்குழுவினர்களுக்குச் சற்றும் குறைவில்லாத நாடகத் திறன் கொண்ட குழுக்கள் நம்மிடையே இருப்பதும், அவர்களின் முயற்சிகள் பாராட்டத்தக்க வகையிலே இருப்பதும், பெருமைக்குரிய விஷயங்கள் தானே...! 'நாடக்' குழுவினருக்கு ...சபாஷ்...!" என்று கூறி இருந்தது. Bay Area Events Sandya Krishna (http://groups.yahoo.com/group/BAeventsbySandya) கலவரத்தைப் பற்றி "Whether it is in the realistic characters, script, costumes, or sets , Kalavaram excels beyond one's expectations" என்று கூறினார். இந்த நாடகத்தைப் பற்றி எழுதப்பட்ட கருத்துகளை http://www.naatak.com/naatak_theater/kalavaram/reviews.htm என்ற வலைதளத்தில் படிக்கலாம்.

அதே குழு இந்த முறை ஒரு வித்தியாசமான நகைச்சுவைக் கதையுடன் ஆகஸ்டு 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நம்மை தேடி Cubberley theater வருகிறது. காசு மேல காசு நாடகத்தின் கதாபாத்திரங்கள் நாம் தான், அதாவது வளைகுடா பகுதியில் வாழும் தமிழர்கள். நண்பர்கள் ஐவர், அவர்களுக்கிடையே உள்ள நட்பு , அவர்களுடைய million dollar கனவுகள், இவைகளைச் சுத்தி பின்னப்பட்ட ஒரு நகைச்சுவை நாடகம் - காசு மேல காசு. நம் கனவுகள் எல்லாம் நிஜமானால், நம் வீட்டினில் மட்டும் பணமழை பொழிந்தால், எப்படி இருக்கும்? என்ன நடக்கும்? Cubberley Theaterக்கு வாருங்கள் வேடிக்கையாகச் சொல்கிறோம் என்கிறார், இந்த நாடகத்தின் இயக்குனர் மணி ராம். அவர் "எங்களின் குறிக்கோள் வித்தியாசமான, தரமான தமிழ் நாடகங்களை உங்களுக்குத் தருவது தான். அதை உங்கள் உதவியுடன் செயல் படுத்துவொம் என்று நிச்சயமாக நம்புகிறோம். இந்த முறை உங்களை சிரிக்க வைத்து கதை சொல்லப் போகிறோம், ஆனால் we are very serious about this comedy." என்று கூறின'ர்.

நாடகத்தின் மூலம் சேரும் நன்கொடையை ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு இந்தியத் தொண்டு நிறுவனத்திற்கு கொடுப்பது தான் நாட்டக்கின் நடைமுறை. அதன்படி இந்த முறை லாபத்தை "Sankara Eye Foundation" மற்றும் "Asha For Education" ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நகைச்சுவை நாடகத்தின் video trailerஐ ஜூலை மாதம் 14, 21 மற்றும் 28 ஆம் தேதிகளில் India Post TVல் (Channel KTSF, காலை 9 மணி) காணத் தவறாதீர்கள். அத்துடன் இந்த trailerஐ நாட்டக்கின் வலைதளத்திலும் (naatak.com) கண்டு மகிழலாம்.
ஆகஸ்டு 3,4 தேதிகளில் நீங்கள் வளைகுடா பகுதியில் இருந்தால், கண்டிப்பாக காசு மேல காசு பார்க்க Cubberley Theaterஇல் இருக்க வேண்டும். காரணம்? இவர்கள் நம்முடைய கலைஞர்கள், நாம் தானே ஆதரிக்க வேண்டும்? திரை கடலோடி திரவியம் தேடினாலும், தமது உபரி நேரம் எல்லாம் செலவு செய்து நம் தமிழ் மொழியில் கலை வளர்க்கிறார்களே, நாம் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டாமா? மற்றும் நாம் நாடகத்தை இங்கு ரசிக்கும் வேளையில், இந்தியாவில் நமது நன்கொடையின் மூலம் ஓர் ஏழை முதியவரின் கண்ணோ அல்லது ஓர் ஏழைக் குழந்தையின் அறிவுக் கண்ணோ திறக்கப்படும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அல்லவா?

ஆதலால், கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க!

Tickets:$12 (General), $10 (Students and Senior citizens) Ticket outlets: Mail Bag-San Jose (408-946-3131), Nilgiris-Sunnyvale (408-746-0808), Taj Mahal-Fremont (510-794-1000), Jeyshree (408-678-1114) and

Priya 650-962-1097 email:kaasumelakaasu@yahoo.com
More

சிகா கோவில் பெருவிழா
தமிழ் இணையம் 2002
Share: 
© Copyright 2020 Tamilonline