கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் இஞ்சி சீடை மிளகு தட்டை நாடா தேன் குழல் மைதா மாவு சிப்ஸ் வெல்ல சீடை வெல்ல அவல் திரட்டுப் பால் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
தேவையான பொருட்கள்
Zucchini - 2 பச்சரிசி - 4 கப் (2 ஆழாக்கு) துவரம் பருப்பு - 1 1/2கிண்ணம் கடலை பருப்பு - 1கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம் தேங்காய் துருவல் - 1கிண்ணம் மிளகாய் வற்றல் - 8-10 பெருங்காயம் - சிறு துண்டு உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப |
|
செய்முறை
முதலில் பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் ரொம்ப அதிகம் தண்ணி விடாமல் சுமார் 2-4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நன்கு ஊறிய பிறகு மிக்ஸியில் நரநரவென மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும்.
Zucchini காரட் சீவும் சீவியில் துருவல் செய்யவும்.
அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், Zucchini துருவல் சேர்த்து தோசை கல்லில் வார்க்கவும்.
இந்த அடை மொறுமொறு என்று இல்லாமல் மிருதுவாய் இருப்பதால் எண்ணெய் குறைவாக விட்டால் போதும், மதிய உணவுக்கு எடுத்துச் செல்ல உகந்தது.
மீரா சிவக்குமார் |
|
|
More
கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் இஞ்சி சீடை மிளகு தட்டை நாடா தேன் குழல் மைதா மாவு சிப்ஸ் வெல்ல சீடை வெல்ல அவல் திரட்டுப் பால் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
|
|
|
|