Zucchini அடை
தேவையான பொருட்கள்

Zucchini - 2
பச்சரிசி - 4 கப் (2 ஆழாக்கு)
துவரம் பருப்பு - 1 1/2கிண்ணம்
கடலை பருப்பு - 1கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
தேங்காய் துருவல் - 1கிண்ணம்
மிளகாய் வற்றல் - 8-10
பெருங்காயம் - சிறு துண்டு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் ரொம்ப அதிகம் தண்ணி விடாமல் சுமார் 2-4 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு நன்கு ஊறிய பிறகு மிக்ஸியில் நரநரவென மிளகாய் வற்றல் சேர்த்து அரைக்கவும்.

Zucchini காரட் சீவும் சீவியில் துருவல் செய்யவும்.

அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், Zucchini துருவல் சேர்த்து தோசை கல்லில் வார்க்கவும்.

இந்த அடை மொறுமொறு என்று இல்லாமல் மிருதுவாய் இருப்பதால் எண்ணெய் குறைவாக விட்டால் போதும், மதிய உணவுக்கு எடுத்துச் செல்ல உகந்தது.

மீரா சிவக்குமார்

© TamilOnline.com