Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
நலம்வாழ
தொட்டுண்ணியா? தோலுண்ணியா?
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeவருடா வருடம் கோடைக்காலத்தில், 'Poison Ivy' என்று சொல்லப்படும் ஒரு வித ஒவ்வாமையில் ஏற்படும் தோல் வியாதி பரவலாக காணப்படும். இந்த நோய், 'உருஷியால்' (Uroshiol) என்று சொல்லப்படும் ஒரு வித chemical ஒவ்வாமை ஏற்படுத்துவதால் உண்டாகிறது. இந்த chemical 'poison ivy, poison oak, poison somac என்று மூன்று விதமான தாவரங்களிடம் காணப்படுகிறது. ஆண்டு தோறும் அமெரிக்காவில் 25 முதல் 40 மில்லியன் மக்கள் இந்த தோல் வியாதி ஏற்பட்டு மருத்துவ உதவி நாடுவதாக கணக்கெடுப்புகள் அறிவிக்கின்றன. தாவரங் களுடன் அதிக ஈடுபாடு உடையவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். உதாரணமாக விவசாயிகள், தோட்ட வேலை செய்பவர்கள், மரங்கள் வெட்டுபவர்கள், தீயணைப்பு படையினர் போன்றவர்களை வேலை நிமித்தம் தாக்கலாம். விளையாடும் பொழுது, இந்த செடிகள் மேல் படுவதால் சிறுவர் களுக்கும் இந்த நோய் ஏற்படலாம். 50% முதல் 75% மக்கள் இந்த பொருளுக்கு ஒவ்வாமை உடையவர்கள். எல்லா விதமான இனத் தவரையும் இது தாக்குவதால், இந்தியர்கள் இதற்கு விதி விலக்கல்ல. அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த நோய் பரவியிருப்பதை படத்தில் காணலாம்.

தாவரங்களின் விவரம்
மூன்று இலைகளாக இருக்கும் இந்த தாவரங்களைக் கண்டால் விலகி இருப்பது உசிதம். ஆங்கிலத்தில், இதை 'leaves of three: let them be' என்று சொல்வதுண்டு. 'Toxicodendron' என்று சொல்லப்படும் இந்த வகை தாவரங்கள் மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு இலைகளாக தண்டிலிருந்து வளர்வது குறிப்பிடத்தக்கது. படங்களை பார்க்கவும். இலையுதிர் காலங்களில் இவை பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் பழங் களை தரவல்லன. இந்த தாவரங்களின் பல்வேறு பகுதிகளில், இலை, தண்டு, பூ, காய், வேர் என்று எல்லா பகுதிகளும் இந்த ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஒரு முறை மேலே படுவதே இந்த ஒவ்வாமை ஏற்படுத்தவல்லது.

அறிகுறிகள்
1. அரிப்பு
2. தோல் சிவப்பாகுதல்
3. சின்ன சின்ன கட்டிகள்
4. அம்மை போல கட்டிகள் குறிப்பாக நேர் கோட்டில் அமைந்திருக்கும்.

தாவரங்களை தொட்டதில் இருந்து 4-96 மணி நேரத்தில் மேற்கூறிய அறிகுறிகள் ஏற்படும். முதல் நாள் அல்லது 2 வாரங்கள் கழித்து குறிப்பாக இந்த அறிகுறிகள் மிகுதியாகும். 3 வாரங்கள் வரை புதிய கட்டிகள் தோன்றிய வண்ணம் இருக்கலாம். உடலின் வெவ்வேறு பாகங்களில் கட்டிகள் தோன்றலாம். இந்த கட்டிகளின் நீர் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை. என்ற போதும், அந்த 'resin' என்று சொல்லப்படும் ஒவ்வாமை ஏற்படுத்தும் chemical உடைகள், நகக்கண்கள், கத்திரிக்கோல், கோடாலி போன்றவற்றில் காய்ந்து தங்கி விடலாம். இதனால் மீண்டும் மீண்டும் தோல் கட்டிகள் தோன்றி மறையலாம். சில வேளைகளில் உடலின் மற்ற உறுப்புகளையும் தாக்கலாம். குறிப்பாக முகம் அல்லது பாலுறுப்புகளை தாக்கினால் நோய் முற்றலாம். ஒருவரிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு பரவும் தொற்று வியாதி இல்லை. என்ற போதும் அந்த resin மூலம் பரவும் அபாயம் இருப்பதால் சுத்தமாகக் கழுவுவது நல்லது.

தடுக்கும் முறை
இந்த தாவரங்களை கண்டு கொண்டு இவற்றை தவிர்ப் பதே சிறந்த தடுப்பு முறை. இந்த செடிகள் இறந்த பின்பும் இந்த ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. துணிகள், கையுறை போன் றவை உதவியினாலும் இந்த ஒவ்வாமையை முற்றிலும் தவிர்க்க இயலுவதில்லை. மேலும் மேற்கூறிய படி இந்த resin உடைகள் மற்றும் கையுறைகளில் தங்கிவிடும் அபாயம் உள்ளது. இந்த செடிகளை எரிப்பதும் நல்லதல்ல. இந்த ஒவ்வாமை ஏற்படுத்தும் 'urushiol' அதிகமான வெட்ப நிலையிலும், நெருப்பாலும் அழிவதில்லை. மேலும், புகையினால் சுற்றுப்புறத்தில் கலந்து அதிகமாக ஒவ்வாமை ஏற்படுத்தவல்லது.

கழுவுதல்
இந்த தாவரங்களைத் தொட நேர்ந்தால் சவுக்காரம் (Detergent) போட்டு கழுவுதல் வேண்டும். முக்கியமாக நகக்கண்களை கழுவ வேண்டும். அதிகமாக தேய்ப்பதும் நல்லதல்ல. தோல் வியாதி ஏற்பட்ட பின்பு கழுவுவது கண் கெட்ட பின் செய்யும் சூரிய நமஸ்காரம் போல உபயோகமில்லாதது. ஆனால், மேற்கூறிய காரணத்தால், தோல் வியாதி ஏற்பட்ட பின்பும், உடைகள் மற்றும் மற்ற பொருட்களை நன்கு கழுவுவது உசிதம். தோல் வியாதியை தவிர்ப்பதற்காக கடைகளில் கிடைக்கும் பல விதமான 'cream' களும் இந்த நோயை முற்றிலும் தவிர்ப்பதில்லை.
Click Here Enlargeதீர்வு முறைகள்
இது மிக அதிகமாக காணப்பட்டாலும், மருத்துவ ஆய்வுகள் அதிகமில்லாத ஒரு நோய். ஆகவே பலவித முறைகளில் இது குணப்படுத்தப்படுகிறது.

1. தோல் மீது தடவும் அறிகுறிகளை குறைக்கும் முயற்சி
இந்த முறையில் தேங்காய் எண்ணெய், 'Calamine lotion' போன்றவை பயன்படும்.

2. அரிப்பை குறைக்கும் 'antihistaminics'.
இந்த முறையில் 'avil', zyrtec, claritin போன்ற மாத்திரைகள் உதவும்.

3. தோல் மீது தடவும் 'Topical Corticosteroids'
இவை மருத்துவரின் ஆலோசனைப்படி தடவப்பட வேண்டும். நல்ல தீர்வு கொடுக்க வல்ல இந்த முறை குறைந்த பக்க விளைவுகளை உடையது. 2 வாரங்களுக்கு மேலாக தடவினால் தோல் சுருங்கும் வாய்ப்புகள் உள்ளன. முகத்தில் தடவாமல் தவிர்ப்பது நலம்.

4. வாய் வழி உட் கொள்ளும் 'systemic or oral corticosteroids'.
'Prednisone' என்று சொல்லப்படும் இந்த மாத்திரை நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவரால் வழங்கப்படும். பக்க விளைவுகளின் காரணமாக அதிகம் உபயோகப்படுவதில்லை. 2 அல்லது 3 வாரங்கள் வரை இந்த மாத்திரைகள் உட் கொள்ள வேண்டி வரலாம்.

5. நுண்ணுயிர் கிருமிகள் தாக்கியிருந்தால் அவற்றை கொல்லும் முயற்சி.
'Antibiotics' என்று சொல்லப்படும் நுண்ணுயிர் கொல்லிகள் தேவைப்பட்டால் வழங்கப்படலாம்.

தடுப்பது நல்லது. கழுவுவது சிறந்தது.
மருத்துவரை நாடுவது உகந்தது.
தடவுவது நல்லது இல்லையேல்
உட்கொள்ளும் மருந்து தேவைப்படும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 




© Copyright 2020 Tamilonline