ஒரு நாள் போதுமா? கனடியத் தமிழரும், தகவல் தொழில் நுட்பமும் சங்க இலக்கியம் என்ற புதையல் ஹையா! கொலு! அன்றும் இன்றும் இயக்குநர் விசு அடிமைகள் உலகத்தில்... அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் கீதாபென்னெட் பக்கம்
|
|
தமிழ் இணையம் 2002 |
|
- |அக்டோபர் 2002| |
|
|
|
அன்பார்ந்த அமெரிக்கத் தமிழ் நண்பர்களே!
ஐந்தாவது அனைத்துலகத் தமிழ் இணைய மாநாடு - தமிழ் இணையம் 2002 - இவ் வாண்டு அமெரிக்காவிலுள்ள கலி·போர் னியா மாநிலத்தைச் சேர்ந்த ·பாஸ்டர் சிடியில் இம்மாத இறுதியில் கூடவுள்ளது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.
தகவல் தொழில் நுட்பத்தின் மெக்கா வாகக் கருதப்படும் சிலிக்கன் பள்ளத்தாக்கில் அத்துறையின் முன்னணியில் நிற்கும் தமிழர் களின் தலைமைத்துவத்தை எதிர்நோக்கி இந்த மாநாடு இந்த முறை அமெரிக்கா விற்கு வந்து சேரவுள்ளது. கடந்த மாநாடு களைப் போல் அல்லாது, அரசாங்க ஆதரவு இன்றி, அரசியல் கட்சிகளின் ஆதரவு இன்றி, சாதாரணத் தனி மனிதர்களின் உழைப்பையும், உதவியையும் உற்சாகத்தை யும் நம்பி நடக்கும் மாநாடு இந்த மாநாடு. ஆயினும், கடந்த மாநாடுகள் ஒவ்வொன்றும் எவ்வாறு முன்னைய மாநாட்டைவிடச் சிறப்பாக நடந்ததோ, அதே போன்று தமிழ் இணையம் 2002ம் சென்ற மாநாட்டை விடச் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் பெரிதும் நம்புகின்றோம்.
உங்கள் நாட்டில், உங்கள் ஊர்த் தலைவர் கள் முன்னின்று நடத்தப் போகும் இந்த மாநாட்டில், உங்களில் பெரும்பாலானோர் கலந்து கொண்டு மாநாட்டைப் பெருமைப் படுத்துவதோடு அயல் நாட்டிலிருந்து வருகை புரியும் பங்கேற்பாளர்களுக்கு நீங்கள் விருந்தோம்பிகளாய், வழிகாட்டிகளாய், இனிய நண்பர்களாய்ச் செயல்பட வேண்டும் என்றும் தாழ்மையோடு கேட்டுக் கொள் கிறோம். |
|
அமெரிக்கத் தமிழ் அன்பர்களே, உங்கள் அன்பும் ஆதரவும் தமிழ் இணைய மாநாட் டிற்கு இன்றும் என்றும் தேவை!
அன்புடன், மா. ஆனந்தக்கிருஷ்ணன் தலைவர், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) |
|
|
More
ஒரு நாள் போதுமா? கனடியத் தமிழரும், தகவல் தொழில் நுட்பமும் சங்க இலக்கியம் என்ற புதையல் ஹையா! கொலு! அன்றும் இன்றும் இயக்குநர் விசு அடிமைகள் உலகத்தில்... அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|