Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
சிறுகதை
பாரதியார் கதைகள்
இரக்கம்
ஆஹா! என்ன ருசி
- தங்கம் ராமசாமி|அக்டோபர் 2002|
Share:
டிரிங்... டிரிங்... டெலிபோன் மணி சப்தம். வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுக் கொண்டி ருந்த சுமதி வேகமாக வந்து எடுத்தாள். ஹலோ... சுமதி சுந்தர் வீடுதானே?

'அடயாருடா இது தமிழ்ல பேசறது' சுமதிக்கு ஒரே மகிழ்ச்சி. ''யா எக்ஸாக்ட்லி நீங்க யார் பேசறது?''

''மேடம் நான் இந்தியாவிலேர்ந்து வந்திருக்கேன். ஒங்க பிரதர் சிவராமன்னு மெட்ராசுல பாங்க்ல இருக்காரே அவர் கொஞ்சம் சாமான் கொடுத்து இருக்கார். நாங்க இப்ப எங்க டாட்டர் ரேவதி பாஸ்கர்னு இங்கே இருக்கா.. உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்... அவ டெலிவரிக்காக வந்திருக் கோம்... அவா எல்லாரும் ஆபீஸ் போயிருக்காங்க''

''ஓகே வெரிகிளாட் நானும் ரேவதி பாஸ்கரைப் பார்த்து இருக்கேன். என்னோட பிரதர்தான் சிவா... சென்னையில இருக்கான்.'' சுமதி கூறி முடிக்கும் முன்...

''கட்டாயமா வந்து பிக்அப் பண்ணிக்கோங்க நாங்க இன்னும் ஒரு வாரத்தில் கலிபோர்னியா போகலாம்னு இருக்கோம்...''

''ஷ்யூர் இந்த சனிக்கிழமை வந்து எடுத்துக்க றோம்... போன் பண்றோம். ரொம்ப தாங்ஸ் ஸார்... - சுமதி போனை வைத்தாள். ஒரே பரபரப்பு அப்பாடி மூணு வருஷமா தம்பி சிவராமனோட ஒரு காண் டாக்டும் இல்லே... பாவம் என்ன அனுப்பியிருக்கா னோ?'' ஒரு தகவலும் இல்லை மனம் சந்தோஷத்தால் துள்ளியது.

ஆபீசிலிருந்து சுந்தர் வந்து ஷ¤வைகூடக் கழற்றவில்லை. சுமதி ஒரேஓட்டமாக ஓடி வந்து மூச்சிரைக்க கம்ப்யூட்டரை வாங்கிக் கொண்டாள்.

''என் தம்பி சிவா இந்தியாவிலேர்ந்து வந்தவா கிட்ட ஏதோ சாமான்கள் கொடுத்து அனுப்பியிருக் கானாம். ரேவதி பாஸ்கர்னு ஒரு லேடி இருக்கா இல்லே அவா அப்பா அம்மா ரேவதி டெலிவரிக்காக வந்துருக்காங்க. அவங்க கிட்ட யார் மூலமாவோ தெரிஞ்சு கொடுத்து அனுப்பியிருக்கான்னு நினைக் கிறேன்... இப்ப போன்ல அவர் சொன்னார்.

''இரு இரு உன் தம்பி சிவாவா சாமான் அனுப்பியிருக்கான். என்ன விசேஷம்? மூணு வருஷமா செளக்கியமா இருக்கீங்களா? என்னன்னு ஒரு ஈமெயிலா லெட்டரா ஒண்ணு கிடையாது... இப்ப என்ன திடீர்னு அக்கா ஞாபகம் வந்துடுத்தா... சுத்த ·பிராடு... ரொம்பப் பாசம் பொங்கி வழியறதாக்கும்''

''சரி சரி விடுங்க அவனைக் குத்தம் சொல்லாதீங்க பாவம் அவன் பிள்ளைக்குப் பூணூல் போட்டான்... நாம ஒரு கிரீட்டிங்ஸ்கூட அனுப்பலை... நான் இருக்கறது ஒரே சிஸ்டர் அவனுக்கு... அந்த வருத்தமா இருக்கும்'' சுமதியின் கண்களில் நீர் பொங்கியது.

''ஸ்டாப் இட் நாம அமெரிக்காவில இருந்து கொண்டு என்ன செய்யமுடியும்? இந்தியா போகும் போது ஏதானும் செஞ்சுட்டாப் போறது.. இந்த ·பார்மாலிடீஸ் எல்லாம் எனக்கு ஒண்ணும் புரியலை... அதை விடு ஆபீஸ்லேர்ந்து வந்தவனுக்கு ஒரு காபி டீ ஒண்ணு இல்லை சிவா புராணம் என்ன வேண்டியிருக்கு? எரிச்சலுடன் கூறினான் சுந்தர்.

''வெரி வெரி சாரி சுந்தர், ஏதோ ஊர் ஞாபகம் வந்ததில மறந்தே போயிட்டேன்... இதோ காபி கொண்டு வரேன்..'' சுமதி கிச்சனில் நுழைந்தாள்.

கையில் காபியுடன் வந்த சுமதி என்னங்க எனக்கு ஒரு யோசனை பாவம் ரேவதியோட அப்பா அம்மா நமக்காக சாமான்களை இந்தியாவிலேர்ந்து கொண்டு வந்திருக்காங்க இல்லே நாம வெறுமனே போகாமல் ஏதாவது வாங்கிட்டுப் போகலாமா?''

''சே பைத்தியம் உன் தம்பி ஏதோ கொடுத்து இருக்கான் அதை சூட்கேஸில வச்சு பிளேன்ல வந்திருக்காங்க... என்ன தலையிலையா தூக்கிட்டு வந்திருக்காங்க... எதையாவது குருட்டு யோசனை செய்யாமே சும்மா கிட'' பட்டென்று கூறினான்.

''பாவம் சிவா என்ன எல்லாம் அனுப்பியருக் கானோ... ஒவ்வொருத்தர் சாமான் குடுத்தா ஏற்கெனவே சூட்கேஸ் ·புல் இடமே இல்லைன்னு கண்டிச்சுச் சொல்லிவிடுவாங்க... இவங்க நல்ல மனது போல இருக்கு எடுத்திட்டு வந்திருக்காங்க. நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நான் அவங்களுக்கு ஒரு புடவை, பேன்ட்ஷர்ட், பழங்கள் வாங்கிட்டுத்தான் போகப் போறேன்...

''நான்சென்ஸ் அந்த அம்மா எப்படி இருக்காங் களோ என்ன மாதிரி புடவை உடுத்துவாங்களோ புரியாம நீ எதாவது செய்யாதே, ஒரு டஜன் ஆப்பிள் வாங்கிட்டுப் போன போதும்''

'சரி நான் பார்த்துக்கறேன் விடுங்க... அனாவசியமா கத்தாதீங்க... மூணு வருசமா டச் இல்லாத இருந்த என் தம்பி இப்ப என்னமோ மனசு வந்து ஏதோ அனுப்பியிருக்கானே அதுவே எனக்கு போதும்...''

சனிக்கிழமை காலையில் ரேவதிக்கு போன் செய்துவிட்டு காரில் பிள்ளை விக்னேஷ், பெண் சுருதியுடன் புறப்பட்டனர். சுமதி முன்னதாகவே ரேவதியின் அம்மாவிற்குப் புடவை அப்பாவிற்கு பாண்ட் ஷர்ட், துணிகள், ஆப்பிள், ஆரஞ்சு என்று நிறைய வாங்கி வைத்திருந்தாள். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். சுமதியின் முகத்தில் பெருமையும் சந்தோஷமுமாய்ப் பூரித்து பொங்கியது. வழியெல்லாம் தன் தம்பியைப் பற்றியே பேசிப் புகழ்ந்து கொண்டே வந்தாள் சுமதி.

ரேவதியின் வீட்டை அடைந்தனர். அவர்களும் சுமதி சுந்தர் குழந்தைகளை அன்புடன் வரவேற்றனர். வழக்கமான உபசரிப்புகள், பேச்சுகள் முடிந்தன.

''ரேவதி உங்களை ரொம்பப் பழக்கமில்லை ஏதோ ஒரு மியூசிக் கான்ஸர்ட்ல மீட் பண்ணினோம்னு நினைக்கிறேன்... கையில் கொண்டு வந்த புடவை துணிமணிகள் பழங்கள் உள்ள பையை ரேவதியிடம் கொடுத்தாள்.

''அட என்ன இது சுமதி என்னென்னவோ கொண்டு வந்து இருக்கீங்க'' நாசூக்காக தேங்ஸ் சொல்லி விட்டுப் பெற்றுக் கொண்டாள் ரேவதி.

''தட்ஸ் ஓகே ரேவதி சின்ன கி·ப்ட் தான்.. அம்மா அப்பாவுக்குக் கொண்டு வந்தேன்'' சுமதி புன் சிரிப்புடன் கூறினாள்.

ரேவதியின் அப்பா ஒரு பெரிய பையை சுந்தரின் கையில் கொண்டு வந்து கொடுத்தார்.

''தாங்ஸ் ஸார்'' சுந்தர் வாங்கிக் கொண்டான்.
''யாரோ தெரிஞ்சவங்க மூலமா நாங்க யுஎஸ் வரது தெரிஞ்சு மிஸ்டர் சிவராமன் இதெல்லாம் கொடுத்து அனுப்பினார்'' ரேவதியின் அப்பா கூறினார்.

''ரொம்ப தாங்ஸ் சார் அப்ப நாங்க கிளம்பறோம்... கட்டாயமா ஒருநாள் எங்க வீட்டுக்கு வாங்க'' சுந்தர் எல்லாரிடம் விடை பெற்றுக் கொண்டான்.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் பார்சலைக் குழந்தைகளும் சுமதியும் பிரித்துப் பார்த்தனர். ''அட இதோ பாரும்மா, சிவா அங்கிள் நல்ல டீ ஷர்ட் அனுப்பியிருக்கார்'' உடனே போட்டுக் கொண்டான் விக்னேஷ். ''ஐ ·பன்டாஸ்டிக் ஆனா கொஞ்சம் பெரிசு உள்ளே வெச்சுப் போட்டுக்கலாம்... என்ன இருந்தாலும் நம்ப ஊர் துணி துணிதான் ஏங்க பார்த்தீங்களா?'' சுமதி மகிழ்ச்சியுடன் கூவினாள்.

''சரி இந்த மைசூர்பாகு என்ன இப்படி கரையறதே'' வாய் நிறைய மைசூர்பாகைத் திணித்துக் கொண் டான் சுந்தர். ''ஏய் விக்னேஷ்' ஷர்ட் தொள தொளன்னு பெரிசா இருக்கே... எனக்குத்தான் அனுப்பியிருக்கான் போல இருக்கு''

''இல்லே இல்லே இது விக்னேஷக்குத்தான் அவனைப் பார்த்து நாளாச்சு அளவு தெரியாம அனுப்பியிருப்பான்... ஏய் என்ன சுருதி கால்ல கொலுசு எடுத்து மாட்டிண்டு, இங்கே பாருங்க கல் வச்சு என்னமா பளபளன்னு மின்னறது? ரொம்ப ஜேராயிருக்கு இல்லே... அட! நல்லியில வாங்கி பட்டு புடவைன்னா அனுப்பியிருக்கான்... கலரும் தலைப்பும், பார்டரும் ரொம் அழகாயிருக்கே... பாவம் சிவா எத்தனை சாமான் ஆசை ஆசையா அனுப்பியி ருக்கான்... என்ன இருந்தாலும் இந்திய சாமான் ஒசத்திதான். எதுக்கும் இப்ப ஒரு கால் போட்டு தாங்ஸ் சொல்லிடலாம்... இந்திய டைம் என்ன எடுங்க போனை... பேசிடலாம்... சிவாவுக்கும் சந்தோஷமாய் இருக்கும்...''

சுமதி வாயில் ஒரு மைசூர் பாகைக் கடித்துக் கொண்டே போனை எடுத்து நம்பரை டயல் செய்தாள். சுந்தரும் பக்கத்தில் வந்து நின்றான். ''பேசு மணி பத்துதான் இருக்கும் தூங்கியிருக்க மாட்டான்''

''ஹலோ சிவா எப்படியிருக்கே... நீ அனுப்பி வச்சது எல்லாம் வெரிவெரி ·பைன்... அதென்ன மைசூர்பாகு வாயில போட்டா தண்ணியா கரையறதே... எல்லாம் இப்பவே காலி... ஷர்ட் ரொம்ப...''

''இரு இரு யாரு நான்சென்ஸ்... நான் சாமான் அனுப்பினேனா? என்ன ஒரே பேத்தல்.. உங்க உறவே வேண்டாம்னு மூணு வருஷமா தலைமுழுகி வெறுத்துப் போய் இருக்கோமே மைசூராவது, பாக்காவது, அம்மா சுமதி நான் எந்த சாமானும் அனுப்பலை... மண்ணாங்கட்டியும் அனுப்பலை... வெரி சாரி போனை வை''... பட்டென்று போன் வைக்கும் சப்தம்.

''அடக் கண்றாவியே இதென்ன கூத்து?'' சுமதி ஒன்றும் புரியாமல் விழிகள் பிதுங்க சோபாவில் உட்காரவும் போன் அலறிற்று...

சுந்தர்தான் எடுத்தான். ''சார் நான்தான் ரேவதியின் ஹஸ்பெண்ட் பேசறேன் பை மிஸ்டெக் உங்ககிட்ட ஒப்படைச்ச சாமான் வேற ஒரு சுமதி சுந்தர்னு எங்க ரேவதியின் ·பிரண்டு ஒருத்தருக்குப் போக வேண் டியது... அனுப்பினவர் பேரும் சிவராமன் என்பதால ஏதோ தவறுதலா உங்ககிட்ட கொடுத்துவிட்டோம்... இப்பதான் அந்த சுமதி சுந்தர் போன் செய்தாங்க வெரி வெரி சாரி... அந்த சாமான்களை நாங்க வந்து பிக்அப் பண்ணிக்கறோம்... ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சுந்தர்.

தங்கம் ராமசாமி
More

பாரதியார் கதைகள்
இரக்கம்
Share: 
© Copyright 2020 Tamilonline