நவராத்திரி ஸ்பெஷல் காராமணி இனிப்பு சுண்டல் புட்டு சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை) அரிசி அப்பம் பாசிப்பருப்பு பாயசம் பால் பாயசம் சர்க்கரைப் பொங்கல்
|
|
|
மேல் மாவு
தேவையான பொருட்கள் மைதா மாவு - 1 1/2 கப் நல்லெண்ணெய் - 1 ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிதளவு இவை மூன்றையும் நன்றாகக் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
பூர்ணம்
தேவையான பொருட்கள் கடலை பருப்பு - 1 கப் தேங்காய் துருவல் - 1/3 கப் வெல்லம் (பொடி செய்தது) - 2 கப் ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
செய்முறை
கடலை பருப்பை நன்றாகக் கழுவி 1/2 கப் தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை குக்கரில் வேக விடவும்.
பிறகு நன்றாக வடிகட்டவும். பருப்பில் சிறிதும் தண்ணீர் இருக்கக்கூடாது.
மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
கனம் அதிகமான பாத்திரத்தில் வெல்லத்தோடு சிறிதளவு தண்ணீர் விட்டு குறைந்த வெப்பத்தில் பாகு பதம் வரும் வரை வைக்கவும்.
துருவிய தேங்காயை வெல்லப்பாகில் இட்டு கிளறவும்.
பின்னர் அரைத்த கடலை பருப்பு மாவை போட்டு நன்றாகக் கிளறவும்.
ஏலக்காய் பொடியை இதனோடு சேர்த்துக் கிளறி, ஆற வைக்கவும்.
இப்பொழுது பூர்ணம் தயார். |
|
போளி
செய்முறை
பிசைந்து வைத்த மைதா மாவில் சிறிதளவு எடுத்து தட்டிக்கொள்ளவும். எலுமிச்சை அளவு பூர்ணத்தை எடுத்து இதன் நடுவில் வைத்து மடிக்கவும்.
சுத்தமான பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தடவி அதன் மீது வைத்து கையால் சப்பாத்தியைப் போல தட்டவும்.
தாவாவில் இட்டு இரு புறமும் வாட்டி எடுத்து வைக்கவும் (சப்பாத்தி செய்வது போலவே).
இதன் மேல் சிறிது நெய்யைத் தடவி பரிமாறவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நவராத்திரி ஸ்பெஷல் காராமணி இனிப்பு சுண்டல் புட்டு சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை) அரிசி அப்பம் பாசிப்பருப்பு பாயசம் பால் பாயசம் சர்க்கரைப் பொங்கல்
|
|
|
|
|
|
|