நவராத்திரி ஸ்பெஷல் காராமணி இனிப்பு சுண்டல் புட்டு சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை) அரிசி அப்பம் பாசிப்பருப்பு பாயசம் சர்க்கரைப் பொங்கல் கடலை பருப்புப் போளி
|
|
|
தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி - ஒரு பிடி பால் - 3/4 லிட்டர் சர்க்கரை - 1 1/2 கப் ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன் வறுத்த முந்திரி - 10 உலர்ந்த திராட்சை - 10 நெய் - 1/2 ஸ்பூன் |
|
2 ஸ்பூன் நெய்யில் அரிசியை வறுத்து, கனம் அதிகமான பாத்திரத்தில் (காப்பர் பாட்டம் பாத்திரம் வசதியானது) இடவும்.
வறுத்த அரிசியில் பாலை விடவும். பின்னர் இதனை குக்கரில் வைத்து, 3 விசில் வந்த பிறகு மிதமான சூட்டில் அடுப்பை எரிய விடவும். 40 நிமிடங்கள் வரை வேக விடவும்.
பாலில் வெந்த அரிசியோடு சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். சர்க்கரை நன்றாகக் கரையும் வரை தொடர்ந்து கலக்கவும் (சர்க்கரையைச் சேர்த்தவுடன் இது சிறிது நீர்த்துக்கொள்ளும். சிறிது நேரத்திற்குப் பிறகு கெட்டியாகிவிடும்).
அருமையான பால் பாயசம் ரெடி.
வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின் குறிப்பு: இதே முறையைப் பின்பற்றி அவல் பாயசம் செய்யலாம்.
விஜயதசமி அன்று சர்க்கரை பொங்கல் மற்றும் கடலை பருப்பு போளியும் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நவராத்திரி ஸ்பெஷல் காராமணி இனிப்பு சுண்டல் புட்டு சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை) அரிசி அப்பம் பாசிப்பருப்பு பாயசம் சர்க்கரைப் பொங்கல் கடலை பருப்புப் போளி
|
|
|
|
|
|
|