நவராத்திரி ஸ்பெஷல் காராமணி இனிப்பு சுண்டல் புட்டு சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை) பாசிப்பருப்பு பாயசம் பால் பாயசம் சர்க்கரைப் பொங்கல் கடலை பருப்புப் போளி
|
|
|
தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 கப் மைதா - 4 ஸ்பூன் ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன் தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் எள்ளு - 1/2 ஸ்பூன் (தேவையெனில்) வெல்லம் (பொடி செய்தது) - 3/4 கப் எண்ணெய் - தேவையான அளவு பொரிப்பதற்கு |
|
செய்முறை
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியை நன்கு களைந்து, கட்டியான பதத்தில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
மைதா, ஏலக்காய் மற்றும் எள்ளு ஆகியவற்றை இந்த மாவோடு சேர்த்துக் கலக்கவும்.
சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, அரிசி மாவு கலவையோடுச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கனம் அதிகமான பாத்திரத்தில் (வாணலி) எண்ணெயைக் காய்ச்சவும்.
எண்ணெய் சூடான பிறகு, அடுப்பை மிதமான சூட்டில் எரிய விடவும். ஒரு ஸ்பூன் மாவு விட்டு பொரிக்கவும். இன்னொரு ஸ்பூனில் கொதிக்கும் எண்ணெய் எடுத்து (வாணலியில் பொரிந்து கொண்டிருக்கும்) மாவின் மீது ஊற்றவும். இவ்வாறு செய்வது அப்பம் ஒரே சீராக உப்புவதற்கு உதவும். இரு புறமும் சிவப்பாக மாறும் வரை பொரிக்கவும்.
பின்னர் அப்பத்திலிருந்து எண்ணெய் வடியவிடவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நவராத்திரி ஸ்பெஷல் காராமணி இனிப்பு சுண்டல் புட்டு சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை) பாசிப்பருப்பு பாயசம் பால் பாயசம் சர்க்கரைப் பொங்கல் கடலை பருப்புப் போளி
|
|
|
|
|
|
|