நவராத்திரி ஸ்பெஷல் புட்டு சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை) அரிசி அப்பம் பாசிப்பருப்பு பாயசம் பால் பாயசம் சர்க்கரைப் பொங்கல் கடலை பருப்புப் போளி
|
|
|
தேவையான பொருட்கள் காராமணி - 2 கப் வெல்லம் (நன்கு பொடி செய்தது) அல்லது நாட்டுச் சக்கரை - 1/4 கப் தேங்காய் துருவல் - 1/8 கப் ஏலக்காய் (பொடி செய்தது) - சிறிதளவு (தேவையெனில்) கடுகு - 1/2 ஸ்பூன் உ. பருப்பு - 1 ஸ்பூன் எண்ணெய் - 1 ஸ்பூன் கருவேப்பிலை - சிறிதளவு உப்பு - சிறிதளவு |
|
செய்முறை
காராமணியை 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைக்க்கவும்.
ஊறிய காராமணியைக் கழுவிய பின், குக்கரில் வேகவைக்கவும் (குழையாமல் இருக்கவேண்டும்). தண்ணீர் அதிகம் இருந்தால் வடிகட்டவும்.
எண்ணெயை வாணலியில் காயவைக்கவும். எண்ணெய் சூடானவுடன் கடுகைச் சேர்த்து வெடிக்கவிடவும். பின்னர் உளுத்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். கருவேப்பிலையைச் சேர்க்கவும்.
வேகவைத்த காராமணி, உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, மெல்லிய சூட்டில் வைக்கவும்.
தேங்காய் துருவலைச் சேர்த்து நன்கு கிளறவும்.
பின் குறிப்பு: இதே முறையில் பாசிப்பருப்பு இனிப்பு சுண்டல் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
நவராத்திரி ஸ்பெஷல் புட்டு சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை) அரிசி அப்பம் பாசிப்பருப்பு பாயசம் பால் பாயசம் சர்க்கரைப் பொங்கல் கடலை பருப்புப் போளி
|
|
|
|
|
|
|