Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | நூல் அறிமுகம் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
புகழ்பெற்ற அமெரிக்க பெண் தொழிலதிபர் இந்திரா நூயி
Dish TV
Dravidian TV
அட்லாண்டாவில் கேட்டவை
மலேசிய மண்ணில் தீபாவளி
கீதாபென்னெட் பக்கம்
தீபாவளி எங்கு? எப்படி?
- |நவம்பர் 2002|
Share:
  • நமக்கு தீபாவளி ஒரேயொரு நாள் கொண்டாட்டம் மட்டுமே. ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் தீபாவளி ஐந்து நாள்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

  • இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, ஜைன, பெளத்த சமயத்தவர்களும் கொண்டாடக்கூடிய ஒரே பண்டிகை தீபாவளி மட்டும்தான். அதனாலேயே தீபாவளியை மூன்று மதங்களின் பண்டிகை என்கிறார்கள்.

  • இந்தியா முழுமைக்குமான பட்டாசுத் தேவையைத் தீர்த்து வைக்கும் நகரம் 'குட்டி ஜப்பான்' எனப்படும் சிவகாசிதான். தமிழகத்தின் சிவகாசியைத் தவிர எர்ணாகுளம், இந்தூர், குவாலியர் போன்ற பிற நகரங்களிலும் ஒரு சில பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

  • சிவகாசியில் மட்டும் 40,000 டன்களுக்கும் அதிக எடையுள்ள ரூ. 300 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.

  • சீனாவில் சுமார் 1000 வகையான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் 100 வகையான பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

  • தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட ஒரே நாடு சிங்கப்பூர்தான்.

  • தீபாவளிப் பண்டிகையன்று அக்பர் சக்கரவர்த்தி பண்டிகையில் கலந்து கொண்டு கொண்டாடியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கோயில்களில் தீபங்களை ஏற்றி வைக்க மான்யமாகப் பல லட்சம் ரூபாய்களை அக்பர் அளித்திருக்கிறார்.

  • நியூசிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், கனடா போன்ற நாடுகளில் வயது வந்தவர்களுக்கு மட்டும் பட்டாசு விற்பனை செய்யப்படுகின்றன.

  • மியான்மரின் (பர்மா) 'தாங்கீஜூ', என்னும் விழாவும், சீனத்தின் 'நஹீம்-ஹீபர்' என்ற விழாவும், தாய்லாந்தின் 'லாய் கிரதோங்' என்ற விழாவும், ஜப்பானின் 'டோரோ நாகாஷி' என்ற விழாவும், ஸ்வீடனின் 'லூசியா' என்ற விழாவும், இங்கிலாந்தின் 'கைபாக்கஸ்' என்ற விழாவும் நம் ஊர் தீபாவளியைப் போலவே விளக்கு வரிசைகளுடன் கொண்டாடப்படும் பண்டிகைகளாகும்.
தொகுப்பு:கண்ணம்மா
More

புகழ்பெற்ற அமெரிக்க பெண் தொழிலதிபர் இந்திரா நூயி
Dish TV
Dravidian TV
அட்லாண்டாவில் கேட்டவை
மலேசிய மண்ணில் தீபாவளி
கீதாபென்னெட் பக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline