புகழ்பெற்ற அமெரிக்க பெண் தொழிலதிபர் இந்திரா நூயி Dish TV தீபாவளி எங்கு? எப்படி? அட்லாண்டாவில் கேட்டவை மலேசிய மண்ணில் தீபாவளி கீதாபென்னெட் பக்கம்
|
|
Dravidian TV |
|
- |நவம்பர் 2002| |
|
|
|
அமெரிக்கத் தமிழ்ச் செய்திகளைத் தென்றல் இணைய வானொலியில் (thendral.com) கேட்டு வருபவர்கள் இப்போது வேறு ஒரு ஊடகம் வழியாக வாரம் ஒரு முறை பார்க்கவும் முடியும். ஓராண்டுக்கு மேலாக நியூயார்க்கின் மும் மாநிலங்கள் (NY/NJ/CT) பகுதியில் ஒளிபரப்பி வரும் திராவிடன் தொலைக்காட்சி (Dravidian TV) செப்டம்பர் முதல் கேபிள் டிவி வழியாக சான் ·பிரான்சிஸ்கோ மற்றும் 360க்கு மேற்பட்ட வட அமெரிக்க நகரங்களுக்கும் வரத் துவங்கியுள்ளது. திராவிடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இண்டர்நேஷனல் சேன்னல் மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் கிழக்கு நேரம் பிற்பகல் 12.30 அல்லது பசி·பிக் நேரம் காலை 9.30க்குப் பார்க்கலாம். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது போல, அரை மணிநேரக் காட்சியில் அமெரிக்காவையே அளந்து வைக்கிறார்கள். சிகாகோ தமிழர் பேரவை மாநாடு, சன் டிவி அமெரிக்கத் திறப்பு விழா, நியூ யார்க் பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா, சான் ·பிரான்சிஸ் கோவில் அண்மையில் நடந்த உலகத் தமிழ் இணைய மாநாடு போன்ற உள்நாட்டுச் செய்தி களும், அமெரிக்கத் தமிழர்கள், இளைஞர்கள் நிகழ்ச்சிகளும் திராவிடன் தொலைக்காட்சியின் குறிப்பிடத் தக்க அம்சங்கள். கனடாவில் டொ ராண்டோ பகுதியில் தமிழர்களின் பேராதரவோடு பன்மடங்கு வளர்ந்திருக்கும் வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் போல், அமெரிக்காவில் துளிர் விட்டிருக்கும் தமிழ் ஊடகங்களும் தொழில் முறைச் சிறப்பும், நேர்த்தியும், பாங்கும், ஒயிலும் பெற்றுப் பன்மடங்கு வளருவது அமெரிக்கத் தமிழர்களின் ஆதரவைப் பொறுத்து இருக்கிறது. சிலிக்கன் பள்ளத்தாக்கில் தினமும் இந்தி, தமிழ்த் திரைப் படங்களைத் திரையரங்குகளில் காட்டுவதற்கு ஆதரவு இருப்பது போல் திராவிடன் தொலைக் காட்சி, தென்றால் வானொலி போன்ற ஊடகங் களும் வளர வாய்ப்பு உள்ளது. |
|
|
|
|
More
புகழ்பெற்ற அமெரிக்க பெண் தொழிலதிபர் இந்திரா நூயி Dish TV தீபாவளி எங்கு? எப்படி? அட்லாண்டாவில் கேட்டவை மலேசிய மண்ணில் தீபாவளி கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|