வெட்டிவேர் கின்னஸ் எலிக் கூண்டு எது நல்ல சினிமா? தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் புத்தக நிலையங்களின் கடல் இப்படியும் தமிழ் கற்கலாம் - டேரியன் தமிழ்ப்பள்ளி Legoland மனம் கவர்ந்த மாது கீதா பென்னெட் பக்கம்
|
|
பத்திரிக்கையாளராக ஆர்வமுள்ள இளைஞர்களே! |
|
- |ஏப்ரல் 2003| |
|
|
|
பத்திரிக்கையாளராக ஆர்வமுள்ள இளைஞர்களே! பாம்மாவின் இலவசப் பட்டறைக்கு வாருங்கள்!!
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி பன்மைப் பண்பாட்டு ஊடகக் கழகம் ( Bay Area Multicultural Media Academy-BAMMA-பாம்மா) வசதியற்ற சிறுபான்மை இளைஞர்களுக்கு இரண்டு வாரப் பத்திரிகையாளர் வேனிற்காலப் பட்டறை (Free Summer workshop for young people of color and economically disadvantaged) ஏற்பாடு செய்துள்ளது. சான் ·பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் (San Francisco State University) தங்கி இலவசமாகப் படிக்க வழி செய்யும் இந்தப் பட்டறையில் இளம் பத்திரிகையாளர்களுக்குத் தீவிரப் பயிற்சி தரப்படும்.
ஒவ்வொரு வேனிற்காலத்திலும், பாம்மா 16 பதின்ம வயது இளைஞர்களைத் (16 teenagers - 14 reporters + 2 photographers) தேர்ந்தெடுத்து இரண்டு வாரம் ஒரு நாளேட்டை வெளியிடப் பயிற்சி கொடுக்கிறது. பயிற்சியின் போது மாணவர்கள் செய்தி நிலையங்களுக்குச் சென்று தொழில்முறை மற்றும் கல்லூரி இதழாளர்களோடு (journalists) சேர்ந்து பணிபுரிவார்கள். இது இதழியலில் தொழில் புரியும் ஆர்வம் உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்து வளர்க்க பாம்மாவின் ஏற்பாடு. இந்தத் திட்டம், செய்தி ஊடகங்களுக்குப் பல இனத்தவரை ஈர்த்து அவற்றின் பன்முகத் தன்மையை வளர்க்க உதவும் முயற்சிகளின் அடிப்படையில் அமைந்தது. 2002-ல், பொதுமக்களில் 30% சிறுபான்மை இனத்தவராக இருந்தாலும், பெரும் பத்திரிகைகளில் பணிபுரிந்த இதழாளர்களில் 12% மட்டுமே சிறுபான்மையினர். ஏறத்தாழ 40% பத்திரிகைகளில் ஒரு சிறுபான்மை இனத்தவர்கூட பணி புரியவில்லை. அமெரிக்காவின் செய்தி நிலையங்களில் பல இனத்தவர் வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கமுள்ள பல செய்தி ஊடக நிறுவனங்கள் (news media companies and corporations) பாம்மாவுக்கு நிதியுதவி அளிக்கின்றன. 2003 பாம்மா பட்டறை ஜூன் 15 முதல் 28 வரை நடக்கவுள்ளது. |
|
விண்ணப்பங்கள் ஏப்ரல் 18, 2003க்குள் பாம்மாவுக்கு வந்து சேரவேண்டும். சான் ·பிரான்சிஸ்கோ பகுதிப் பதின்ம இளைஞர்கள் பாம்மாவின் வலைப்பக்கத்துக்கு (www.ciij.org) வந்து விண்ணப்பப் படிவத்தை இறக்கிக் கொள்ளுங்கள்.
தொடர்புக்கு: பேட்டி கார்சியா, (415)338-2083 pattigarcia3@hotmail.com. |
|
|
More
வெட்டிவேர் கின்னஸ் எலிக் கூண்டு எது நல்ல சினிமா? தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் புத்தக நிலையங்களின் கடல் இப்படியும் தமிழ் கற்கலாம் - டேரியன் தமிழ்ப்பள்ளி Legoland மனம் கவர்ந்த மாது கீதா பென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|