|
|
தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது.
பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது.
அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போலப் பழம்தருது.
அம்மா வைத்த முருங்கையுமே அளவில் லாமல் காய்க்கிறது. |
|
அண்ணன் வைத்த மாதுளையோ கிண்ணம் போலப் பழுக்கிறது.
சின்னஞ் சிறுவன் நானுமொரு செடியை நட்டு வளர்ப்பேனே!
அழ. வள்ளியப்பா |
|
|
|
|
|
|
|