Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2003 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
க்ளீவ்லேண்டில் தியாகராஜ ஆராதனை!
விழாக்கோலம் கொண்ட நியூஜெர்சி
சிகாகோவில் ப. சிதம்பரம்!
குழந்தைகளுக்காக நடைபயணம்!
ஸ்ரீமதி ரோஸ் முரளிகிருஷ்ணனின் மனதைக் கொள்ளை கொண்ட இனிமையான கச்சேரி
·ப்ரிமொன்ட் கல்சுரல் ஆர்ட்ஸ் கெளன்சில்
புத்தரின் பெயரால்...
செல்லுலாய்டு கிளாசிக்ஸ்
அமெரிக்கன் இந்தியன் ·பவுன்டேஷன்: சமூகத் தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்
ரவிகிரன் அளித்த ராக விருந்து
தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா!
கண்டு, கேட்டு, ரசித்த - கண்மணியே!
ஸ்ரீ ஸ்ரீ சொற்பொழிவில் 'அன்பு'
- ராஜேஸ்வரி|ஜூன் 2003|
Share:
Click Here Enlargeசென்ற மாதம் பதினோறாம் தேதி ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்கள் தனது எளிமையான அறிவாற்றல் மிக்க இனிமையான உரையில் அன்பின் மகத்துவத்தை எடுத்துரைத்தார். அன்பு, அதன் வெளிப்பாடான, புன்னகை, தன்னலமற்ற சேவை, இவற்றை மறந்து கொண்டிருக்கும் அவசர யுகத்தில், ஸ்ரீ ஸ்ரீ-இன் 'ஆர்ட் ஆ·ப் லிவ்விங்' என்னும் பொதுநல அமைப்பு, நூற்றுக்கும் மேலான நாடுகளில் மனித நேயத்தையும் அடிப்படை வாழ்க்கைத் தத்துவத்தையும் உணர வைத்து, இருபது லட்சங்களுக்கு மேலான உள்ளங்களைத் தனது ''சுதர்ஷன் கிரியா'' என்னும் பிராணாயாம பயிற்சி மூலம் மலர வைத்திருக்கிறது.

நமது அன்றாட வாழ்க்கையின் எரிச்சல்கள், மன அழுத்தங்கள், சோர்வு, கவலைகள் அனைத்தையும் இருந்த இடம் தெரியாமல் செய்வது தியானம் என்பதை சொற்பொழிவில் உணர்த்தினார் ஸ்ரீ ஸ்ரீ. சொற்பொழிவுக்கு முன்னால் அங்கு இதமான பக்திப் பாடல்கள் ஒலித்தன. ஆன்மீக சொற்பொழிவுக்கு வந்த அனைவரையும், ஒன்றுபட்ட அமைதியான நிலைக்குத் இழுத்துச் சென்றது அங்கு ஒலித்த பஜன்கள். தியானம் முடித்து, கண் திறந்து, ''அன்பைப் பற்றிப் பேச ஒரு ஒற்றுமை உணர்வுடைய சூழல் தேவை, அதனை அரசியல் போன்று சாதாரணமாக விமர்சிக்க இயலாது'' என்று கூறி, அனைவரையும் தத்தம் அருகிலிருப்பர்களுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கூறினார்.

தொடர்ந்து ''வாழ்க்கையின் பொருள் என்ன என்று வினவுவது நம் அறிவு முதிர்ச்சியின் தொடக்கம். மனிதனின் தீராத தாகம், அளவற்ற, அப்பழுக்கற்ற, உன்னதமான அன்பைத் தேடுவதில் இருக்கிறது. அன்பு வெளிப்படுத்துவதற்கு அரியது. எத்தனை அளவு வெளிப்பட்டாலும் அத்தனை ஈடாக அமையாது. அன்பு கொடுப்பதிலேயன்றி எதிர்பார்ப்பதில் இல்லை.
இரவு முழுவதும் ஒருவன் படுக்கையைத் தயார்செய்து, உறங்க நேரம் கிடைக்காமல் போவது போன்ற வாழ்க்கை இது. இதை உணர வேண்டும். நமக்கு விழிப்புணர்ச்சி மிகவும் அவசியம். உடல் ஏழு தாதுக்கள், ஐந்து பூதங்களால் ஆனது. ஆனால் ஆன்மாவோ அன்பு அழகு, சத்யம், மகிழ்ச்சி, கனிவு போன்ற பண்புகளால் ஆனது. அதனை வலுப்படுத்துவதே ஆன்மீகம். பல்வேறு கல்வி கற்க முயலும் நாம் ஆன்மீகம் கற்கவில்லை. மனம் தெளிவாக இருக்கும்போது பாதை விளங்கும். பிராணா யாமம், தியானம் போன்றவை நம்மைத் தெளிவாகவும் அமைதியாகவும் வைத்துக் கொண்டு ஞானம் பெறும் பாதையில் செல்ல ஒளி கொடுக்கும்''. என்ற அவரின் சொற் பொழிவைக் கேட்டு அங்கிருந்த அனைவரின் மனமுமே அமைதி நிலைக்குத் திரும்பியது என்பது நூற்றுக்குநூறு உண்மை.

ராஜேஸ்வரி
More

க்ளீவ்லேண்டில் தியாகராஜ ஆராதனை!
விழாக்கோலம் கொண்ட நியூஜெர்சி
சிகாகோவில் ப. சிதம்பரம்!
குழந்தைகளுக்காக நடைபயணம்!
ஸ்ரீமதி ரோஸ் முரளிகிருஷ்ணனின் மனதைக் கொள்ளை கொண்ட இனிமையான கச்சேரி
·ப்ரிமொன்ட் கல்சுரல் ஆர்ட்ஸ் கெளன்சில்
புத்தரின் பெயரால்...
செல்லுலாய்டு கிளாசிக்ஸ்
அமெரிக்கன் இந்தியன் ·பவுன்டேஷன்: சமூகத் தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்
ரவிகிரன் அளித்த ராக விருந்து
தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா!
கண்டு, கேட்டு, ரசித்த - கண்மணியே!
Share: 




© Copyright 2020 Tamilonline