கீதா பென்னெட் வீணைக் கச்சேரி ஜெர்ஸி ரிதம்ஸ் வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006 இந்திய-மேற்கத்திய இசை சங்கமம் கிரிக்கெட் ஃபார் இந்தியா '06 சிறுவர் தின விழா 2006
|
|
சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா |
|
- |அக்டோபர் 2006| |
|
|
|
சிகாகோ தமிழ்ச் சங்கம் 2006 ஆம் ஆண்டுக்கான இன்பச் சுற்றுலா (Picnic) டெஸ்பிளென்ஸ் நகரப் பூங்காவில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்பட்ட சிகாகோ தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 10 க்கும் மேற்பட்ட விளை யாட்டுப் போட்டிகளில் 50 க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
டென்னிஸ் விளையாட்டுப் போட்டி: சிகாகோ தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அரோராவில் உள்ள ரஷ் கோப்ளே சுகாதாரம் மற்றும் உடற் பயிற்சி (Rush Copley Healthplex Fitness Center) நிலையத்தில் 2006 ஆம் ஆண்டுக்கான டென்னிஸ் விளயாட்டுப் போட்டியை நடத்தியது. இந்தப் போட்டி ஆண்கள் இரட்டையர், ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், 5 முதல் 8 வயது குழந்தைகள், 9 முதல் 13 வயதுக் குழந்தைகள் என 5 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் 45 க்கும் மேற்பட்டோ ர் உற்சாகத்துடன் கலந்து கொண்டு திறம்பட விளையாடினார்கள். இவர்களில் ஆண்கள் 25 பேர் பெண்கள் 4 பேர், குழந்தைகள் 20 பேர். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் நடக்கும் குழந்தைகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும். |
|
மெல்லிசை விழா: சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு மெல்லிசை விழா அக்டோ பர் மாதம் 14 ஆம் தேதி மாலை லெமாண்ட் ராமர் கோயில் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 60, 70, 80 ஆம் ஆண்டுகளில் வெளி வந்து நம் மனங்களைக் கவர்ந்த பாடல்களோடு, புதுப் பாடல்களையும் வழங்க இருக்கிறார்கள். சிகாகோவின் புகழ் பெற்ற பழைய பாடகர்களோடு, புதிய பாடகர்களும் நம்மை மகிழ்விக்க இருக்கிறார்கள்.
எஸ்டேட் சுபி |
|
|
More
கீதா பென்னெட் வீணைக் கச்சேரி ஜெர்ஸி ரிதம்ஸ் வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006 இந்திய-மேற்கத்திய இசை சங்கமம் கிரிக்கெட் ஃபார் இந்தியா '06 சிறுவர் தின விழா 2006
|
|
|
|
|
|
|