பாரத விலாஸ் பாட்லக் பூசணிக்காய்க் கூட்டு ஆந்திர முனகாக்கு வேப்புடு (முருங்கைக்கீரைக் கறி) கேரள அப்பம் மற்றும் இஷ்ட்டு காய்கறி இஷ்ட்டு தயாரிக்க (Vegetable Stew) அக்கி (அரிசி) ரொட்டி
|
|
பெடீ(ட்) ஔபே(ன்) (ப்ரென்ச் மொழியில் - சிறிய அழகிய ரொட்டி) |
|
- உமா வெங்கட்ராமன்|நவம்பர் 2003| |
|
|
|
இதைப் பெரியோரும், சிறுவரும் மிக விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்குத் தேவையான பொருட்கள் சாதாரணமாக அமெரிக்கக் குரோசரிகளில் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
செமி ஸ்வீட் சாக்லெட் மோர்செல்ஸ் - 2 அவுன்ஸ் மில்க் சாக்லெட் மோர்செல்ஸ் - 6 - 12 அவுன்ஸ்
இவை 6 அல்லது 12 அவுன்ஸ் அளவுகளில் கிடைக்கும். இந்த அளவை இரண்டு அல்லது மூன்று முறை உபயோகப்படுத்தலாம்.
வெண்ணை - சிறிதளவு வால்நட் (அக்ரூட்) - 6 அவுன்ஸ் கன்பெ·க்ஷனர்ஸ் சர்க்கரை (confectioner's sugar) - 1 பேக்கட் ப·ப் பேஸ்ட்ரீ ஷீட்ஸ் - குளிர் பதனப்படுத்தப்பட்டது (frozen puff pastry sheets)
இது ஒரு பேக்கில் இரண்டு ஷீட்டுகள் இருக்கும் ஒரு ஷீட்டுக்கு 15 எண்ணிக்கை வரும். |
|
செய்முறை
40 நிமிடங்கள் ப·ப் பேஸ்ட்ரீ ஷீட்டை அறையின் சூழல் வெப்ப நிலைக்குக் கொண்டு வரவும் (thaw). பின்பு அந்த ஷீட்டை 15 துண்டுகளாக வெட்டவும். 4 மில்க் சாக்லெட் மோர்செல்ஸ்ஐயும், ஓரிரு உடைத்த வால்நட்களையும் ஒவ்வொரு ஷீட்டிலும் வைத்து மடித்துத் தண்ணீர் வைத்து ஒட்டவும். (முட்டையை அடித்துத் தண்ணீரில் கலந்தும் ஒட்டுவதற்கு உபயோகிக்கலாம்). ஓவனை (oven) 400 டிகிரிக்கு சூடு படுத்திப் பேஸ்ட்ரித் துண்டங்களை 8 நிமிடங்களுக்கு பேக் (bake) செய்யவும். பின்பு அவற்றைத் திருப்பிப் போட்டு, மேலும் 4 நிமிடங்களுக்கு வைக்கவும்.
ஓவனில் பேஸ்ட்ரி பேக் ஆகிக் கொண்டிருக்கும் போது, சாக்லெட் ஸாஸை செய்து வைத்துக் கொள்ளலாம்.
2 அவுன்ஸ் செமி ஸ்வீட் சாக்லெட் மோர்செல்ஸை 2 மேஜைக்கரண்டி (6 தேக்கரண்டி) தண்ணீ£ருடனும், 1 1/2 மேஜைக்கரண்டி வெண்ணையுடனும் 1 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து, 3 மேஜைக்கரண்டி கன்பெ·க்ஷனர்ஸ் சர்க்கரையுடன் (ருசிக்குத் தகுந்தபடி) கலந்து ஸாஸைத் தயாரித்துக் கொள்ளவும்.
பேஸ்ட்ரியை ஓவனிலிருந்து எடுத்து, சாக்லெட் ஸாஸை அதன் மேல் அழகாக ஊற்றி, பெடிட் ஔ பேனை சூடாகப் பரிமாறவும்.
உமா வேங்கடராமன் |
|
|
More
பாரத விலாஸ் பாட்லக் பூசணிக்காய்க் கூட்டு ஆந்திர முனகாக்கு வேப்புடு (முருங்கைக்கீரைக் கறி) கேரள அப்பம் மற்றும் இஷ்ட்டு காய்கறி இஷ்ட்டு தயாரிக்க (Vegetable Stew) அக்கி (அரிசி) ரொட்டி
|
|
|
|
|
|
|