பெடீ(ட்) ஔபே(ன்) (ப்ரென்ச் மொழியில் - சிறிய அழகிய ரொட்டி)
இதைப் பெரியோரும், சிறுவரும் மிக விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்குத் தேவையான பொருட்கள் சாதாரணமாக அமெரிக்கக் குரோசரிகளில் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

செமி ஸ்வீட் சாக்லெட் மோர்செல்ஸ் - 2 அவுன்ஸ்
மில்க் சாக்லெட் மோர்செல்ஸ் - 6 - 12 அவுன்ஸ்

இவை 6 அல்லது 12 அவுன்ஸ் அளவுகளில் கிடைக்கும். இந்த அளவை இரண்டு அல்லது மூன்று முறை உபயோகப்படுத்தலாம்.

வெண்ணை - சிறிதளவு
வால்நட் (அக்ரூட்) - 6 அவுன்ஸ்
கன்பெ·க்ஷனர்ஸ் சர்க்கரை (confectioner's sugar) - 1 பேக்கட்
ப·ப் பேஸ்ட்ரீ ஷீட்ஸ் - குளிர் பதனப்படுத்தப்பட்டது (frozen puff pastry sheets)

இது ஒரு பேக்கில் இரண்டு ஷீட்டுகள் இருக்கும் ஒரு ஷீட்டுக்கு 15 எண்ணிக்கை வரும்.

செய்முறை

40 நிமிடங்கள் ப·ப் பேஸ்ட்ரீ ஷீட்டை அறையின் சூழல் வெப்ப நிலைக்குக் கொண்டு வரவும் (thaw). பின்பு அந்த ஷீட்டை 15 துண்டுகளாக வெட்டவும். 4 மில்க் சாக்லெட் மோர்செல்ஸ்ஐயும், ஓரிரு உடைத்த வால்நட்களையும் ஒவ்வொரு ஷீட்டிலும் வைத்து மடித்துத் தண்ணீர் வைத்து ஒட்டவும். (முட்டையை அடித்துத் தண்ணீரில் கலந்தும் ஒட்டுவதற்கு உபயோகிக்கலாம்). ஓவனை (oven) 400 டிகிரிக்கு சூடு படுத்திப் பேஸ்ட்ரித் துண்டங்களை 8 நிமிடங்களுக்கு பேக் (bake) செய்யவும். பின்பு அவற்றைத் திருப்பிப் போட்டு, மேலும் 4 நிமிடங்களுக்கு வைக்கவும்.

ஓவனில் பேஸ்ட்ரி பேக் ஆகிக் கொண்டிருக்கும் போது, சாக்லெட் ஸாஸை செய்து வைத்துக் கொள்ளலாம்.

2 அவுன்ஸ் செமி ஸ்வீட் சாக்லெட் மோர்செல்ஸை 2 மேஜைக்கரண்டி (6 தேக்கரண்டி) தண்ணீ£ருடனும், 1 1/2 மேஜைக்கரண்டி வெண்ணையுடனும் 1 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து, 3 மேஜைக்கரண்டி கன்பெ·க்ஷனர்ஸ் சர்க்கரையுடன் (ருசிக்குத் தகுந்தபடி) கலந்து ஸாஸைத் தயாரித்துக் கொள்ளவும்.

பேஸ்ட்ரியை ஓவனிலிருந்து எடுத்து, சாக்லெட் ஸாஸை அதன் மேல் அழகாக ஊற்றி, பெடிட் ஔ பேனை சூடாகப் பரிமாறவும்.

உமா வேங்கடராமன்

© TamilOnline.com