| மிச்சிகன் தமிழ் சங்கம்: கிறிஸ்துமஸ் / இளவட்டக் குதூகலம் தீபவாளி விழா - ஓர் கண்ணோட்டம்!
 விஷால் ரமணி சிறந்த ஆசிரியராக கெளரவிப்பு
 நாட்டிய ஆடல் அரங்கம்
 லயவிந்யாசம்
 நியூஜெர்ஸி தமிழ்சங்கம் வழங்கிய சரிக (SaReGa) இசை நிகழ்ச்சி
 நியூ ஜெர்ஸியில் நடந்த வயலின் இசை விருந்து
 மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் 2006 தமிழ்தேனீ போட்டி முடிவுகள்
 கவிப்பேரரசின் 'கருவாச்சி காவியம்'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | நியூஜெர்சியில் கர்நாடக சங்கீத மகான்களுக்கு ஆராதனை |    |  
	                                                        | - ![]() | ![]() ஜனவரி 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  வடக்கு அமெரிக்க கர்நாடக சங்கீத குழு (CMANA) ஆண்டுதோறும் டிசம்பரில் இந்த ஆராதனையை நடத்தி வருகிறது. இந்த வருடம், குழந்தைகளை மையமாய் வைத்து நடக்கும் இந்த விழா டிசம்பர் 9ம் தேதி (சனிக்கிழமை) நியூஜெர்சி பிரிட்ஜ்வாட்டர் கோவில் அரங்கில் சிறப்பாக நடந்தது. பங்கு பெறும் குழந்தைகள் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டே வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வருடம் 150 க்கும் மேலான ஐந்தரை வயது முதல் பதினெட்டு வயது வரை உள்ள குழந்தைகள் பங்கு பெற்று சிறப்பித்தனர். நியூஜெர்சி தவிர பாஸ்டன், நியூயார்க், கனக்டிகட், ஒஹையோ, பென்சில்வேனியா போன்ற வெளியூரி லிருந்தும் பலர் பல மைல் பயணத்துடன் வந்து பங்கேற்றனர்.
 
 வாய்ப்பாட்டு, இசைக்கருவி, தாளக்கருவி, கட்டுரை என்று பல போட்டிகளில் சிறுவர் சிறுமியர் உற்சாகத்துடன் நடுவர்களே திணறும்படி போட்டியிட்டனர். மேடையில் அடுக்கி வைத்திருந்த 200 கோப்பைகளும், குழந்தைகளின் வண்ண பட்டு பாவடைகளும் கண்கொள்ளா காட்சியாகவும், வீணை, மிருதங்கம், ஸ்ருதி சேர்க்கும் சத்தம் செவிகளுக்கு உணவாகவும் இருந்தன. விழாவின் இறுதியில்
 
 சென்ற வருடம் போட்டியில் வென்ற ஸ்மிதா கிருஷ்ணன் ஒரு மணி நேரம் வயலின் கச்சேரி சிறப்பாக செய்தார். அதற்கு மிருதங்கம் அழகாய் ஆனந்த் வாசித்தார்.
 | 
											
												|  | 
											
											
												| CMANA இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்து பொதுப்பணியில் ஈடுபடும் குழந்தைகளையும் ஊக்குவிக்கிறது. இந்த வருடம் நவின் பசவன்ஹல்லி, ஸ்ருதி நாராயணன், வர்ஷினி நாராயணன் ஆகிய சிறுவர், சிறுமியருக்கு சிறப்பு பரிசு கிடைத்தது. 
 நியூஜெர்சியில் பல ஆன்மீக அமைப்புகளில் பங்கு பெரும் டாக்டர் யக்ஞசுப்ரமணியம் தலைமை வகித்து பரிசுகளையும் கோப்பை களையும் வழங்கினார். CMANA அமைப் பாளர்களின் சேவையையும் குழந்தைகளின் உற்சாகத்தையும் பாராட்டிப் பேசினார். காலை 8 மணிக்கு ஆரம்பித்த விழா மாலை 8.30 மணிக்கு மங்களம் பாடி முடிவடைந்தது.
 
 ராதா ஐய்யர், நியூஜெர்ஸி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மிச்சிகன் தமிழ் சங்கம்: கிறிஸ்துமஸ் / இளவட்டக் குதூகலம்
 தீபவாளி விழா - ஓர் கண்ணோட்டம்!
 விஷால் ரமணி சிறந்த ஆசிரியராக கெளரவிப்பு
 நாட்டிய ஆடல் அரங்கம்
 லயவிந்யாசம்
 நியூஜெர்ஸி தமிழ்சங்கம் வழங்கிய சரிக (SaReGa) இசை நிகழ்ச்சி
 நியூ ஜெர்ஸியில் நடந்த வயலின் இசை விருந்து
 மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் 2006 தமிழ்தேனீ போட்டி முடிவுகள்
 கவிப்பேரரசின் 'கருவாச்சி காவியம்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |