கீதா பென்னெட் வீணைக் கச்சேரி ஜெர்ஸி ரிதம்ஸ் வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006 கிரிக்கெட் ஃபார் இந்தியா '06 சிறுவர் தின விழா 2006 சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
|
|
இந்திய-மேற்கத்திய இசை சங்கமம் |
|
- |அக்டோபர் 2006| |
|
|
|
பண்டிட் ஹபீப் கான் என்கிற இசை இயக்குனர் பல சிதார் நிகழ்சிகள் மற்றும் புதிய ஜாஸ் நிகழ்ச்சிகளை தனியாகவும், குழுக்களிலும், உலக இசை அரங்கங்களில் நடத்தியிருக்கிறார். இவர் இசையின் ஆழத்தையும் பரிமாணத்தையும், அது மொழிக்கு அப்பாற்பட்டதென்பதை உலகுக்கு எடுத்துக் காட்ட புதிய வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்.
Journey On The Strings என்ற நிகழ்ச்சி பல இசைக் கருவிகளின் உதவியால் வெவ்வேறு ஸ்ருதிகள் மற்றும் ஒலிகளின் திறமையான சங்கமமாக விளங்கப் போகிறது. இதன் முதல் பகுதி பண்டிட் ஹபீப் கான் மற்றும் பிரபல ஜாஸ் கிடார் கலைஞர் திரு. லாரி கொரியல் (Larry Coryell) இணைந்து வழங்கும் சிறப்பான, இந்திய-மேற்கத்திய இசை சங்கமம். இதை தொடர்ந்து, உலகப்புகழ் பெற்ற சித்திரவீணா கலைஞர் திரு. சித்திரவீணா ரவிகிரண் அவர்களும் சேர்ந்து கொள்வார். பண்டிட் ஸ்வபன் சௌத்ரி தபலா, திருச்சி ஸ்ரீ. சங்கரன் மிருதங்கம் மற்றும் திரு. லால் சிங் பாட்டி (Lal Singh Bhatti) பஞ்சாபி டோ ல் வாசிப்பார்கள். திரு. பீட்டர் ப்ளாக்: சாக்ஸஃபோன், திரு. ஜான் வாலர்: ட்ரம், திரு. அபிநய் பத்யே மற்றும் திரு. சதீஷ் தரே தபலா நிகழ்ச்சியும் உண்டு. |
|
இதை தொடர்ந்து இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சியில், வாய்ப்பாட்டு, இந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகளின் சங்கமத்தில், பண்டிட் ஹபீப் கான் இயற்றிய புதிய பாடல் மல்கௌன்ஸ் (Malkauns) ராகத்தில் கேட்டு மகிழலாம்.
'Journey On The Strings' நிகழ்ச்சி நவம்பர் 4, 2006, அன்று மாலை 6:00 மணிக்கு San Jose, Montgomery Theater-ல் நடைபெற உள்ளது. |
|
|
More
கீதா பென்னெட் வீணைக் கச்சேரி ஜெர்ஸி ரிதம்ஸ் வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006 கிரிக்கெட் ஃபார் இந்தியா '06 சிறுவர் தின விழா 2006 சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
|
|
|
|
|
|
|