நியூயார்க்கில் நிருத்ய சாகர் ஆண்டுவிழா பாரதி கலாலயாவின் நன்றித் திருநாள் சிகாகோவில் குழந்தைகள் தினவிழா சிகாகோவில் மாவீரர் தினம் தென்கலி·போர்னியத் தமிழரின் தீபாவளி 2003 லாங் பீச்சில் இரண்டு தமிழ் நாடகங்கள் மனோகர நடன வினோதினி அரங்கேற்றம்
|
|
விரிகுடாத் தமிழ் மன்றம் வழங்கிய குழந்தைகள் நிகழ்ச்சி |
|
- பாகிரதி சேஷப்பன்|ஜனவரி 2004| |
|
|
|
டிசம்பர் 6ம் தேதி மதியம் இரண்டு மணி. மழைக்கான முன்னறிவிப்பு இருந்தும் கூட கோம்ஸ் பள்ளியின் அரங்கம் உட்கார இடமில்லாமல் நிரம்பி வழிந்தது. சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாத் தமிழ் மன்றம் வழங்கிய குழந்தைகள் நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்றுப் பரிசுக் கோப்பைகள் வென்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. சிறுவர், சிறுமியர் நாட்டியம் ஆடியும், பாடல்களைப் பாடியும் மகிழ் வித்தனர். சில குழந்தைகள் விதவிதமான வேடம் அணிந்து வந்து அந்த வேடத்திற் கான செய்திகளைக் கூறினார்கள். ஒரு புத்தம் புதிய குழந்தைகள் நாடகமும் தமிழில் அரங்கேற்றப்பட்டது. பல சிறப்பான வேடங்களுக்கான ஆடைகள் இந்தக் குழந்தைகள் நிகழ்ச்சிக்காக இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் வரவழைக்கப்படுகின்றன. பெற்றோர்களும், ஆசிரியர்களும், நிகழ்ச்சி அமைப்பாளர்களும் காட்டும் ஆர்வமும் உழைப்பும் இந்நிகழ்ச்சியின் பெருவெற்றிக்குக் காரணமாகும். குழந்தைகளின் திறமைகளோ வியப்பிற்கும், பாராட்டிற்கும் உரியதாகும். |
|
2003 ஆண்டின் தமிழ் மன்றச் செயற் குழுவும், 2004ம் ஆண்டின் செயற்குழுவும் இணைந்து இந்த நிகழ்ச்சியினை வழங்கினர். உதவும் கரங்கள் அமைப் பினைச் சேர்ந்த தன்னார்வப் பணி யாளர்கள் சிற்றுண்டி மற்றும் காபி வழங்கி உதவியதுடன், தங்கள் அமைப்பிற்கு நிதியும் திரட்டினார்கள். 'மோஸ்ட்லி தமிழ்' சுதா சிவசுப்பிரமணியம் அவர்கள் திரைக்குப் பின்னிருந்து ஒலிபெருக்கியைக் கையாளும் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்திக் கொடுத்தார்.
பாகீரதி சேஷப்பன் |
|
|
More
நியூயார்க்கில் நிருத்ய சாகர் ஆண்டுவிழா பாரதி கலாலயாவின் நன்றித் திருநாள் சிகாகோவில் குழந்தைகள் தினவிழா சிகாகோவில் மாவீரர் தினம் தென்கலி·போர்னியத் தமிழரின் தீபாவளி 2003 லாங் பீச்சில் இரண்டு தமிழ் நாடகங்கள் மனோகர நடன வினோதினி அரங்கேற்றம்
|
|
|
|
|
|
|