'சுவாசம்' இசைக் குறுந்தகடு சுரபியுடன் ஒரு கலைப் பயணம் அழகு சதகம் லக்னெள நினைவுகள்
|
|
சென்னையில் சிறப்பான வர்த்தகப் பயிற்சிப் பள்ளி |
|
- மதுரபாரதி|ஜனவரி 2004| |
|
|
|
எவ்வளவோ இருந்தும் சென்னையில் குறிப்பிடத்தக்க ஒரு வர்த்தகப் பயிற்சிப் பள்ளி (Business Institute) இல்லை என்ற குறை விரைவில் நீங்குகிறது. இதற்குப் பின்னால் இருப்பவர் அமெரிக்காவின் பிரபல கெல்லாக் வர்த்தப் பள்ளியின் பேராசிரியர் பாலா வி. பாலச்சந்திரன்.
Great Lakes Institute of Management என்ற பெயரில் வரும் மே மாதத்திலிருந்து சென்னையில் துவங்கவிருக்கும் இந்தப் பள்ளியின் ஆலோசனைக் குழுவில் இந்தியாவின் பெரிய புள்ளிகள் எல்லோரும் அடக்கம். ரத்தன் டாடாவைத் தலைவராகக் கொண்ட இந்தக் குழு குமாரமங்கலம் பிர்லா, இன்·போசிஸ் நாராயணமூர்த்தி, ஜி.பி. கோயங்கா, ஜாம்ஷெட் கோத்ரஜ், தீபக் பரேக், வேணு ஸ்ரீனிவாசன், என். சங்கர், எல். லக்ஷ்மண், ஏ.எம். நாயக் மற்றும் எஸ். ராமதுரை ஆகியோரைக் கொண்டிருக்கும்.
வருகைதரும் பயிற்றுநர்களாக கெல்லாகின் மோஹன்பீர் சாஹ்னி மற்றும் சி.கே. பிரஹலாத், பன்னாட்டு நிதி நிறுவனத்தின் ரகுராம் ராஜன், வார்ட்டனின் கிருஷ்ணன் ராமஸ்வாமி, ஹார்வார்டின் வி. கஸ்தூரி ரங்கன், யேலின் சியாம் சுந்தர் ஆகியோர் இருப்பர். இப் பள்ளியின் டீன் (Dean) ஆகப் பேரா. பாலச்சந்திரனே இருப்பார். |
|
ஆரம்பத்தில் கல்விக் கட்டணம் 2.97 இலட்சம் ரூபாயாக இருக்குமாம். "நியாயமான கட்டணத்தில் தரமான கல்வி" எங்கள் லட்சியம் என்கிறார் பாலா. இதன் பட்டயப் படிப்பிற்கு இல்லிநாய் தொழில்நுட்பப் பள்ளியின்கீழ் வரும் ஸ்டூவர்ட் வர்த்தகப் பள்ளி சான்றிதழ் தருகிறது.
'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முன்பெல்லாம் சொல்வதுண்டு. இப்போது தலைகீழாகி வருவதாக எல்லாக் கணிப்புகளும் பேசுகின்றன. நல்லதுதானே.
நன்றி: தி எகனாமிக் டைம்ஸ், சென்னை தமிழில்: மதுரபாரதி |
|
|
More
'சுவாசம்' இசைக் குறுந்தகடு சுரபியுடன் ஒரு கலைப் பயணம் அழகு சதகம் லக்னெள நினைவுகள்
|
|
|
|
|
|
|