Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
பாராளுமன்றத்தில் தமிழக தலைவர்கள் சிலை திறப்பு!
பெரியார் சிலை உடைப்பும் தொடர்ந்த வன்முறைகளும்...
ம.தி.மு.கவில் சலசலப்பு!
மீண்டும் உச்சநீதிமன்றம்!
- கேடிஸ்ரீ|ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeமுல்லைபெரியாறு பிரச்சினைத் தொடர்பாக மத்திய அரசு முன்னிலையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படாததை அடுத்து, உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகுவதை தவிர வேறு வழியில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்ததை தொடர்ந்து இப்பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தில்லியில் கடந்த மாதம் 29ம் தேதி (நவம்பர்) தமிழக மற்றும் கேரள முதலமைச்சர்கள் மத்திய அரசு முன்னிலையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பு இரு மாநில அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின.

அணையை உயர்த்தக்கோரி ம.தி.மு.க பொதுசெயலர் வைகோ கடந்த 18ம் தேதி முதல் (டிசம்பர்) 23ம் தேதி வரை நடைப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

"முல்லை பெரியாறு அணை விஷயத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க நினைப்பது துரதிருஷ்டவசமானது" என்று கேரள அரசு கருத்து தெரிவித்துள்ளது.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

பாராளுமன்றத்தில் தமிழக தலைவர்கள் சிலை திறப்பு!
பெரியார் சிலை உடைப்பும் தொடர்ந்த வன்முறைகளும்...
ம.தி.மு.கவில் சலசலப்பு!
Share: 




© Copyright 2020 Tamilonline