|
யார் நல்ல நண்பன்? |
|
- |மே 2004| |
|
|
|
Who is a good friend?
பாலனும் வேலனும் நண்பர்கள். ஒரு நாள் இருவரும் காட்டுவழியாகப் போனார்கள். Balan and Velan were friends. One day, they were passing through a forest.
சற்று தூரத்தில் ஒரு கரடி வருவதைப் பார்த்தார்கள். கரடியிடமிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்தனர். They saw a bear at a distance. "How do we escape from this bear?" they thought.
பாலனுக்கு மரம் ஏறத் தெரியும். ஆகவே அவன் வேகமாக ஓடி மரத்தில் ஏறிக் கொண்டான். Balan knew how to climb a tree. So, he climbed up a nearby tree very fast.
வேலன் செத்த பிணம் போல அசைவில்லாமல் கீழே படுத்துக் கொண்டான். கரடி வந்தது. தலை முதல் கால் வரை வேலனை மோந்தது. Velan lied down on the ground like a corpse. The bear came and smelled all over him.
பிணம் என்று நினைத்து அவனை விட்டு விட்டுப் போய் விட்டது. Thinking that it is a dead body, the bear left him.
மரத்தில் ஏறிய பாலன் கீழே இறங்கி வந்தான். ''வேலா! கரடி உன்னிடம் என்ன சொல்லியது?'' என்று கேட்டான். Balan came down the tree and asked "Velan, what did the bear tell you?" |
|
''ஆபத்தைக் கண்டு ஓடுகிற நண்பனை நம்பாதே'' என்று கரடி சொல்லியது என்றான். "The bear told me not to trust the friend who runs away in times of danger," said Velan.
ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன். A true friend is one who helps in times of danger. |
|
|
|
|
|
|
|