சிகாகோவில் பாம்பே ஜெயஸ்ரீ சிகாகோவில் தேனிசை மழை வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம் SIFA-வின் வெள்ளிவிழா கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004 சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சான் ஹோசேயில்... தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கனெக்டிகட் நியூயார்க்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
|
|
பத்ரிகாஸ்ரமத்தின் இருபதாவது ஆண்டுவிழா |
|
- |ஜூலை 2004| |
|
|
|
மே மாதம் 8 - 9 தேதிகளில் பத்ரிகாஸ்ரமத் தின் 20வது ஆண்டுவிழா சுவாமி ஓம் காரனந்தாஜியின் சேவைக்கான ஆழ்ந்த நன்றியறிதலாகக் கொண்டாடப்பட்டது. சனிக்கிழமை 8-ஆம் தேதி காலை ஸ்ரீகாந்த் சாரியின் வீணை வாசிப்புடன் தொடங் கியது. குரு லால்குடி ஜெயராமனின் வர்ணத்தில் ஆரம்பித்து, தியாகையர், புரந்தரதாசர் மற்றும் பிற பாடலாசிரியர் களின் கிருதிகளில் தொடர்ந்தது. உடன் வாசித்த ஸ்ரீராம் ப்ருமானந்தத்தின் மிருதங்கம் அவருக்கு எல்லாவகையிலும் ஈடுகொடுப்ப தாக இருந்தது.
வடகலிஃபோர்னிய வேதாந்தக் கழகத்தின் தலைவரான ஸ்ரீ ஸ்வாமி பிரபுத்தானந்தஜீ மஹராஜ் பத்ரிகாஸ்ரமத்தின் எளிய துவக்கத்திலிருந்து இன்றுவரையிலுமான வரலாற்றை நினைவுகூர்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துடனான ஓம்காரானந்தரின் தொடர்பைக் குறிப்பிட்ட அவர், எவ்வாறு ஆன்மீக சேவைக்கு வருபவர்கள் தனது சுயத்தை இறையின் ஆணைக்குச் சமர்ப்பித்துப் பணி செய்யவேண்டும் என்பதை விளக்கினார்.
பின்னர் ஹேமா சிஸ்டா கர்நாடக இசை வழங்க, ஸ்ரீகாந்த் சாரி (வீணை), பிரம்மானந்தம் (மிருதங்கம்) பக்கம் வாசித் தனர். உணவு இடைவேளைக்குப் பின் சுமிதா சக்ரவர்த்தியின் ஹிந்துஸ்தானி இசை விருந்து கிட்டியது. இதில் அவர் சமஸ்கிருத சுலோகங்கள், மீராபஜன் மற்றும் இறைப் பாடல்களை நெஞ்சுருகப் பாடினார். சுமிதா தானே ஹார்மோனியமும் வாசித்துக் கொள்ள, பாலாஜி தபேலாவில் தொடர்ந்தார். லதா ஸ்ரீராம் தனது 20 மாணவர் களுடன் வழங்கிய கர்நாடக இசைக் கச்சேரியுடன் அன்றைய நிகழ்ச்சி நிறைவுற்றது. |
|
மறுநாள் நிகழ்ச்சி சாக்ரமென்டோவிலிருந்து ரீட்டா சஹாய் மற்றும் அவரது மாணவர்களின் 15 ஆண்டு வழக்கப்படி 108 சத்ய நாராயண பூஜையுடன் தொடங்கியது. இவர்கள் பக்தியிசையும் சிறப்பாக இருந்தது. அடுத்து பக்தர்கள் சிரத்தையுடனும், மந்திர மற்றும் பாடல் ஒலிகளுடனும் சுமார் 400 பக்தர்கள் சுவாமி ஓம்காரானந்தாவுக்குப் பாதபூஜை செய்தனர். மங்களானந்தாவின் ஆண்டறிக்கைக்குப் பின் 'ஹரிகதா' நடைபெற்றது. பின் சுவாமிகள் அருளுரை வழங்கினார்.
ஞானேஸ்வர் பிரபு பேசுகையில் ஆஸ்ரமத் தின் கட்டிடப்பணிக்கான அவசியத்தை விளக்கினார். |
|
|
More