சிகாகோவில் பாம்பே ஜெயஸ்ரீ சிகாகோவில் தேனிசை மழை வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம் SIFA-வின் வெள்ளிவிழா கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004 பத்ரிகாஸ்ரமத்தின் இருபதாவது ஆண்டுவிழா சான் ஹோசேயில்... தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கனெக்டிகட் நியூயார்க்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
|
|
சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி |
|
- ஜயஸ்ரீ|ஜூலை 2004| |
|
|
|
இந்தியப் பண்பாட்டின் வரலாற்றை மையமாகக் கொண்டு, ஒரு பிரம்மாண்ட மான இசை நாட்டிய நிகழ்ச்சியை நூற்றுக்கும் மேற்பட்ட குரல்களும், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வாத்தியங்களும் ஒருங்கே இசைக்க நடித்தால் அது எப்படி இருக்கும்? இத்தகைய ஒரு பிரம்மாண்டமான படைப்பை இனமொழி பேதமின்றி இந்தியரும், அமெரிக்கரும் ஒருங்கிணைந்து கொடுத்தால் அது எப்படி இருக்கும்?
இத்தகைய ஓர் வரலாறு படைக்கும் நிகழ்ச்சி ஒஹையோ கலைக் கவுன்சிலின் ஆதரவுடன், சின்சினாட்டியில் மே 1, 2004 அன்று அரங்கேறியது. மேடையில் 125 பாடகர்கள். அதில் கிட்டத்தட்ட 85 பேர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள். மீதமுள்ளவர் அமெரிக்கர். இவர்களுடன் 16 பேர் கொண்ட ஒரு சேம்பர் ஆர்க் கெஸ்டரா (வயலின், வியோலா, செல்லோ போன்ற வாத்தியங்கள் கொண்டது) மற்றும் 10 நபர்கள் கொண்ட ஓர் இந்தியப் பல்லியக் குழு, இவர்கள் ஒன்றிணைந்த இசைத்த இசையைக் கேட்பது, பார்ப்பது ஓர் மெய் சிலிர்க்கும் அனுபவம்.
இவர்களுடன் 20 நடனக் கலைஞர்கள் நடனமாடினர். மேலும் இந்திய வரலாற்றுச் சிறப்பை விளக்கும் காட்சிகள் - படங்கள் திரையில் காட்டப்பட்டன. மொத்தமாக, இது ஒரு பல்லூடக இசைநாட்டிய நிகழ்ச்சி.
அமைதியும், ஆழமும் நிரம்பிய 5000 ஆண்டுகள் தொன்மையான பண்பாடு பாரதத்திற்குச் சொந்தமானது என்பதை சின்சினாட்டிப் பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாக விளக்கியது இந்நிகழ்ச்சி. ''எப்படிவிவரிப்பது என்றே தெரியவில்லை. அப்பப்பா! எம்மை நெகிழச் செய்துவிட்டது இந்த நிகழ்ச்சி. இதை இன்னும் பல இடங்களில் அரங்கேற்ற வேண்டும்'' என உளமாறப் பாராட்டினார் ஒஹையோவின் பன்மைக் கலாச்சார விவகாரங்கள் இயக்குநர் ரோமன் ·பெட்கிவ்.
பாரதப் பண்பாடு
பொதுவாக, இந்தியா என்றாலே அமெரிக்கர்களுக்கு 'outsourcing'தான் நினைவுக்கு வரும். இத்தகைய சூழ்நிலையில் பாரதத்தின் பன்முகக் கலாசரத்தினை இசையின் மற்றும் நடனத்தின் மூலமாகவும், படங்களின் மூலமாகவும் பிரமிப்பூட்டும் வகையில் காண்பித்தது 'சாந்தி--ஓர் அமைதிப் பயணம்'.
தஞ்சைப் பெரிய கோயில், இமாலயச் சிகரங்கள் போன்ற காட்சிகளை ஏழு திரைகளில் ஒரே சமயத்தில் காண்பித்ததில் ஒரு IMAX படம் பார்ப்பது போன்ற பிரமிப்பான சூழல் நிலவியது.
கன்னிக்ஸ் கன்னிகேசுவரன்
தீர்க்கதரிசனமும் முற்போக்கான தத்துவமும் நிறைந்தது இந்தியாவின் இலக்கியம் மற்றும் இசை. இத்தகைய விஷயங்களை அனைத்துலக மக்களும் ரசிக்கும்படி அர்த்தமுள்ள பாடல்கள் பலவற்றை இயற்றியவர் ரவீந்திரநாத் தாகூர். இந்திய இசையை மேற்கத்தியோருக்குப் புரியும்படி அளித்தார் இசை மேதை ரவிசங்கர். இவர்களின் வரிசையில் சேர்கிறார் இப்படைப்பின் காரணகர்த்தாவான கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன்.
இப்படைப்பை கருத்துருவாக்கி, வடமொழி சுலோகங்களையும் தமிழ்ச் செய்யுள் களையும் இசை வடிவில் அமைத்து பின்னர் பங்கு கொண்ட அனை வருக்கும் கற்பித்து இப்படைப் பை இயக்கியவர் கன் னிக்ஸ். மேடையில் இசைக் கலைஞர் களை வழி நடத்தியவர் கேதரைன் ரோமா. |
|
இசை
ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை, மேற் கத்திய செவ்விசை என்னும் பல அம்சங் களையும் பிரித்துணரமுடியாதபடிச் சிறப் பான ஒத்திசைவோடு அமைத்திருந்ததை அங்கு வந்திருந்த டயானா என்ற இசைக் கலைஞர் உட்படப் பலரும் பாராட்டினர். "இதைக் கலப்பிசை (fusion) என்பதைவிட இயைபிசை (synthesis) என்று சொல்வதே தகும்" என்கிறார் கன்னிக்ஸ்.
இந்நிகழ்ச்சிக்காக 120 புடவைகள் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டன. ஆம். அமெரிக்கர்களும் புடவை அணிந்தே மேடையேறினர். இவர்களுக்குப் 'புடவை அணிவது எப்படி? என்றும் ஒரு பயிற்சி வகுப்பு! "மெய்யாகவே இது ஒரு கலாச்சாரக் கலப்பு அனுபவம்" என்கிறார் நடத்துனர் கேதரைன்.
மூன்று மாத ஒத்திகை
இதில் பங்குகொண்ட புனித ஜான் யூனிட்டேரியன் சர்ச் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் கொயலிஷன் கொரால் பாடகர்களுடன் இந்தியப் பாடகர்களுமாகச் சேர்ந்து மூன்று மாதமாக நடக்கு ஒத்திகையில் "இசை மட்டுமல்ல, எண்ணங் களும், உணவுவகைகளும், தோழமையும் ஏராளமாகப் பரிமாறப்பட்டது" என்கிறார் வாண்டா கிரா·போர்டு.
பிரபல இசைக்கலைஞர் லட்சுமி சங்கர் இந்நிகழ்ச்சியில் கெளரவக் கலைஞராகப் பங்குபெற்றார். ''50 ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்துஸ்தானி இசையில் நிபுணராக விளங்கிவரும் இவர் எங்களுடன் பாடியது எமக்கு மிகப் பெருமையாய் உள்ளது" என்கிறார் இசையமைப்பாளர் கன்னிக்ஸ்.
மனாமி என்னும் வயலின் வாசிப் பவர்''இந்த நிகழ்ச்சியில் மேற்கத்திய இசைக்கலைஞராய் பங்கேற்று இந்த குழுவுடன் பழகியதில் எனக்கு இந்தியாவுக் குப் போக வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது" என்று சொன்னார். இதைப் போலவே பலரும் கூறினர்.
பாராட்டுக்கள்
நிகழ்ச்சையைப் புகழ்ந்த ஓஹையோ ஆளுநர் பாப் டே·ப்ட் மே ஒன்றாம் தேதி இனி 'வேற்றுமையில் ஒற்றுமை நாள்' எனக் கொண்டாடப்படவேண்டும் என அறிவித்தார். மக்கள் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நிர்மல் சின்ஹா "மீண்டும் மீண்டும் சாந்தி பல இடங்களில் அரங்கேற வேண்டும்" என்ற தன் விழைவைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் கரகோஷம் அடங்க வெகுநேரமாகியது. சுமார் 1400 பேர் இதனைக் கண்டு களித்தனர்.
மேலும் விவரமறிய: www.shantichoir.org
தொகுப்பு: ஜயஸ்ரீ |
|
|
More
சிகாகோவில் பாம்பே ஜெயஸ்ரீ சிகாகோவில் தேனிசை மழை வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம் SIFA-வின் வெள்ளிவிழா கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004 பத்ரிகாஸ்ரமத்தின் இருபதாவது ஆண்டுவிழா சான் ஹோசேயில்... தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கனெக்டிகட் நியூயார்க்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
|
|
|
|
|
|
|