சிகாகோவில் பாம்பே ஜெயஸ்ரீ சிகாகோவில் தேனிசை மழை வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004 சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி பத்ரிகாஸ்ரமத்தின் இருபதாவது ஆண்டுவிழா சான் ஹோசேயில்... தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கனெக்டிகட் நியூயார்க்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
|
|
|
நான்கு நாள் திருமணம் நடந்து முடிந்த மகிழ்ச்சியும் களைப்பும் வளைகுடாப் பகுதி வாழ் கர்நாடக இசை ரசிகர்களுக்கு; மே மாதம் 28 முதல் 31-வரை தொடர்ந்து SIFA (South Indian Fine Arts) நடத்திய வெள்ளி விழா முழுநாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்திருந்து சான் ஹோசேயை மேற்கத்திய உலகின் கர்நாடக இசை மையமாக மாற்றிவிட்டனர்.
ஷேக் சுபானியின் நாதஸ்வர இசையில் ஆரம்பித்த விழா முதல் நாளே களை கட்டியது. CET அரங்கத்தின் நடைபாதை ஜமக்காளத்தில் தொடர்ந்த நாதஸ்வர இசை, தென்னிந்திய கலாச்சாரத்தை ஒரு நொடிப் பொழுதில் கண்முன் நிறுத்தியது. இருபத்தைந்து வருடங்களாக இந்த இசை மற்றும் கலாச்சாரப் பணியைச் செவ்வனே செய்யும் SIFA-வின் காரியதரிசிகளை அறிமுகம் செய்ததும், இந்தியாவிலிருந்து கலைஞர்களை இங்குத் தருவிக்க உதவி யாக இருந்த ஏர் இந்தியா மற்றும் அவர் களுடைய அமெரிக்க முகவர்களை அறிமுகம் செய்ததும் இந்த விழாவின் பிரம்மாண்டத்தை ரசிகர்களுக்கு உணர்த்தியது. |
|
கலைஞர்கள் சங்கரநாராயணண், அருணா சாயிராம், சுதா ரகுநாதன், ரமணி, மைசூர் மஞ்சுநாத், மாண்டலின் ஸ்ரீநிவாஸ், T.M. கிருஷ்ணா மற்றும் ஹரிபிரசாத் செளராசியா ஆகியோர் வந்து அனை வரையும் இசை வெள்ளத்தில் திக்கு முக்காடச் செய்தனர். உள்ளூர்க் கலைஞர் கள், இசையாசிரியர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் இவர்களையும் அரவணைத் துப் பங்கேற்கச் செய்தது மிகச் சிறப்பு.
தங்கள் வீட்டில் நான்கு நாட்கள் பலரும் சமையல் செய்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், காலை உணவு முதல் இரவு உணவுவரை அனைத்தும் சுவையான, தரமான, சிக்கனமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாம் எங்கு இருக்கிறாம் என்ற உணர்வே இல்லாமல் இசையுடனும் நம் கலாசாரத்துடனும் ஒன்றியிருந்த பலரை இத்தகைய விழா மீண்டும் மீண்டும் வாராதா என ஏங்கச் செய்தது நிதர்சனமான உண்மை.
பத்மப்ரியன் |
|
|
More