அமெரிக்காவில் வாழும் முதிய தலைமுறை இந்தியர் நைஜீரியாவில் மதுபானம் மலிவு பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரைக்குப் பரிசு முப்பதாண்டைக் காணும் தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை காதில் விழுந்தது...
|
|
சத்குரு ஜக்கி வாசுதேவ் அருளுரை |
|
- |ஜூலை 2004| |
|
|
|
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஆகஸ்ட் 8, 2004, ஞாயிறு அன்று மாலை 5 மணிமுதல் 7 மணிவரை சான்டாகிளாரா கன்வென்ஷன் சென்டரில் சொற்பொழிவாற்றுகிறார்.
மனிதன் உயர்ந்த நிலையை அடைவதற்குத்தான் ஆன்மீகமே தவிர குறிப்பிட்ட சில நம்பிக்கைகளோடு தன்னை அடை யாளம் காண அல்ல. அனைத்து மதங்களுமே உள்நிலை நோக்கிய பயணமாகத் தொடங்கினாலும்கூட, ஒரு எல்லைக்குமேல் அவை திசைதிரும்பி, சில நம்பிக்கைகளின் தொகுப்பாகவே மாறிவிட்டன.
வாசுதேவ் அவர்கள் நிர்மாணித்த ஈஷா மையத்தின் அடிப்படை நோக்கம், மதத்தை ஒரு உள்நிலை அனுபவமாகக் கொண்டு சேர்ப்பதே தவிர அதை ஒரு நம்பிக்கையாக நிலைநிறுத்துவது அல்ல. எந்த நம்பிக்கையோடும் தொடங்காமல், எது உண்மையோ அந்த உண்மையை அனுபவத்தால் கண்டு ணர்ந்து இன்னும் ஆழமாகப்போய், அதை ஒரு அறிவியலாக அணுகத் தொடங்க வைப்பதே ஈஷா யோகத்தின் நோக்கம்.
உண்மையிலேயே ஓர் உயர்ந்த அனுபவம் ஒருவருக்கு ஏற்பட்டாலேயொழிய, வெளி யுலகத்திற்கென்று பயன்படும்படி அவர் எதையும் செய்ய இயலாது. நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் தன்மையைத்தான் நீங்கள் பரப்பப் போகிறீர்கள். நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ அதுதான் உண்மை. நீங்கள் என்னவாக இருக்கிறீர் களோ, அதுதான் உங்கள் மூலம் பரப்பப்படப் போகிறது. எனவே நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணி உங்களை மாற்றிக் கொள்வது. அமைதிப் புரட்சி என்று ஈஷா யோகம் அழைப்பது இதைத்தான். நீங்கள் மாற விரும்பினால் தான் உலகத்தில் மாற்றம் என்பது சாத்தியம். உண்மையான தீர்வு ஏற்படும்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் வாழும் யோகியாக, ஞானியாக, குருவாகத் திகழ் பவர். எந்தவொரு குறிப்பிட்ட பாரம் பரியத்தையும் சாராமல், தற்கால மனிதனின் தேடலுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில், ஆன்மீக அறிவியலை வழங்குகிறார்.
பல்லாயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களின் உறுதுணையோடு சத்குரு அவர்கள் உலகின் மிக முக்கிய ஆன்மீகத் தலைவர்களோடும், இயக்கங்களோடும் ஒன்றிணைந்து உலக அமைதி, சர்வதேச ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். புத்தாயிரமாண்டில் ஐ.நா. சபையில் நிகழ்ந்த உலக அமைதிக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்ததோடு, உலக மதத்தலைவர்கள் கூட்டமைப்பிலும் சத்குரு அவர்கள் அயராது பணியாற்றுகிறார்.
சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகம் - இறைநிலை யோகம். உல கெங்கும் இலட்சக்கணக்கான மனிதர் களுக்குப் பயன் அளித்து வருகிறது. சத்குரு அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஈஷா அறக்கட்டளை என்னும் சர்வதேசப் பொதுநல அமைப்பின் மூலமாக, இந்த யோக வகுப்புகள் உலகின் பல பகுதிகளில் நடத்தப்படுகின்றன. |
|
ஈஷா அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் ஈஷா யோகத் தலைமை மையம், கோவையிலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ளது. இங்கு உலகிலேயே மிகப் பெரியதும், பாதரசத்தை அடித்தளமாகக் கொண்டதுமான உயிரோட்டமுள்ள தியானலிங்கம் அமைந்துள்ளது.
வாழ்வின் மாற்றம் நிகழ்த்தும் யோகப் பயிற்சிகளை வழங்குவதோடு மட்டுமின்றி, இந்தியக் கலாச்சாரத்தின் அடித்தளமாய் விளங்கும் கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்துவதற்காக கிராம புத்துணர்வு இயக்கம் சத்குரு அவர்களின் தொலை நோக்குப் பார்வையால் உருவாகியிருக்கிறது.
தனிமனிதர்களும், இயக்கங்களும், கிராம மக்களுடன் ஒன்றிணைந்து மிக நுட்பமாக உருவாக்கப்பட்ட திட்டங்களை சிறு கிராமங்களிலும் செயல்படுவத்துவதன் மூலமாக, பொருளாதார மற்றும் சமூகச் சூழலில் சிக்குண்ட மக்களின் வாழ்வில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். கிராமங்களில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் யோகப் பயிற்சிகள், நடமாடும் இலவச மருத்துவமனை, உற்சாக மூட்டும் விளையாட்டு நிகழ்ச்சிகள், பயன்பாடும் பாரம்பரியமும் மிக்க மூலிகைத் தோட்டங்கள், பெண்களுக்குத் தொழிற் பயிற்சி போன்றவை இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்.
மேலும் விபரங்களுக்கு: தொலை பேசி எண் 408.829.8261 இணையத்தளம் : www.ishafoundation.org |
|
|
More
அமெரிக்காவில் வாழும் முதிய தலைமுறை இந்தியர் நைஜீரியாவில் மதுபானம் மலிவு பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரைக்குப் பரிசு முப்பதாண்டைக் காணும் தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை காதில் விழுந்தது...
|
|
|
|
|
|
|