மேடைநாடகம்- 'நாட்டக்' வழங்கிய ரகசிய சிநேகிதியே பிட்ஸ்பர்க்கில் பரதக்கலை ஜெயமணியின் சேவை! வாசகர் கடிதம்! தெரியுமா?
|
|
|
அரசியல் முனையில் அர·பாத்தின் சாதனை அசாத்தியமானது. பல பத்தாண்டுகளாக விடாமல் பயங்கரவாத-அரசியல் போராட்டத்தின் மூலம், உலக அரங்கில் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு முதலிடம் பெற்றதுடன் பாலஸ்தீனியர்களின் ஆட்சி உரிமைக்கும், அவர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கும் உலகத்தின் ஒருமித்த பேராதரவையும் வென்றார். பாலஸ்தீனியர்களின் தலைமையை இவர் ஏற்கும் முன்னர் (1949-1967) பாலஸ்தீனியச் சிக்கலைப் பற்றி யாருக்குமே அக்கறையிருந்ததில்லை. இவர் தன் தலைமையில் சுதந்திர பாலஸ்தீனத்தை அடைய மிக நெருங்கினாலும் தன் வாழ்நாளில் அடையவில்லை. இருந்தாலும், ஜோர்ஜ் டப்யா புஷ்ஷ¤ம், ஏரியல் ஷேரனும் கூட சுதந்திரப் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
பென்னி மாரிஸ், நியூயார்க் டைம்ஸ் கருத்துரையில்.
*****
காந்தியின் சத்யாக்கிரகம் வெறும் தொடை நடுங்கி அமைதித் தத்துவமில்லை. அது ஆற்றலுள்ள ஆயுதம். பிரிட்டானியப் பேரரசையே முறியடிக்கத் துணைபுரிந்த ஆயுதம். நூற்றுக்கணக்கான இஸ்ரேலிகளையும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்ளையும் கொன்று குவித்ததைத் தவிர பாலஸ்தீன இன்ட்டி·பாடா கலகத்தால் சாதிக்க முடிந்ததென்ன? தோட்டாக்களாலும் குண்டுகளாலும் இன்ட்டி·பாடாவால் சாதிக்க முடியாததைக் காந்திவழி சத்யாக் கிரகம் சாதிக்கக் கூடும்.
என்.பி.ஆர்.,முன்னாள் செய்தியாளர் எரிக் வைனர், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸில்.
*****
காலப்போக்கில் தம் எதிரிகளைப் போலவே தாமும் ஆகி விடுகிறார்கள் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். சித்திரவதைக்காரர்களை நாம் சித்திரவதை செய்கிறோம். நம் கடவுள் அவர்கள் கடவுளைவிட உயர்ந்தவர் என்று நம் படைத்தலைவர்கள் மூலம் சொல்லத் தொடங்கி விட்டோம். இதை நம் அதிபரும் கண்டு கொள்ளவில்லை.
நியூ யார்க் டைம்ஸ், கட்டுரையாளர் கேரி வில்ஸ்.
*****
ஐ.நா. சபையும், உலகச் சட்டத்தின் இறையாண்மையும் நெருக்கடியில் இருக்கின்றன. இராக் போருக்குப் பின்னர் ஐ.நா. காலத்துக்கு ஒவ்வாத தேவையற்ற பழம் பெருச்சாளி என்ற கூக்குரல்கள் ஓங்கியுள்ளன. இராக் போர் சட்டத்துக்குப் புறம்பானது என்றார் ஐ. நா. பொதுச் செயலாளர் கோ·பி அன்னான். அதை உலக நீதிமான்கள் ஆமோதிக்கிறார்கள். அமெரிக்காவும் பிரிட்டனும் மறுக்கின்றன. போர் சரியோ தவறோ, ஒவ்வொரு நாடும் ஐ.நா.வைப் புறக்கணித்து, தான் வைத்ததே சட்டம் என்று ஆடும் ஆபத்து வெளிப்படை. அமெரிக்காவின் இராக் போர் காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தான் தோன்றித்தனமான, சட்டத்துக்குப் புறம்பான போர்களுக்கு முன்னோடியாகலாம் என்று எச்சரித்தார் கோ·பி அன்னான்.
எகானமிஸ்ட் வார இதழ்
*****
மேற்கத்தியச் சிந்தனைக்கும் ஏனைய சிந்தனைக்கும் இடையில் ஒரு விந்தையான வேறுபாடு கற்பிக்கப்படுகிறது. மற்றவர்கள் சிந்தனைகளின் மதச்சார்பற்ற தன்மைகளை ஒதுக்கி அளவுக்கு அதிகமான மதச்சார்பு கற்பிக்கிறார்கள் பலர். ஐசக் நியூட்டனின் கிறித்தவ நம்பிக்கை மற்றும் மெய்ஞான ஈடுபாட்டுக்கும் அவரது அறிவியல் சிந்தனைக்கும் யாரும் தொடர்பு கற்பிப்பதில்லை. ஆனால் (இந்து, முஸ்லிம், பௌத்தம், சீனம் போன்ற) ஏனைய சிந்தனைகளுக்கு சமயக் கொள்கைகள் அடிப்படையாகக் கருதப்படுகின்றன.
அமார்த்தியா சென், நியூ யார்க் ரெவ்யூ அ·ப் புக்ஸ்
*****
எல்லா அடிப்படை வாதங்களும் எளிமையான நம்பிக்கை நிலவிய உத்தமப் பழங்காலம் என்று நம்பும் காலத்துக்கு நம்மைத் திரும்ப அழைக்கின்றன. எல்லா அடிப்படைவாதிகளும், புனிதப் புத்தகங் களைத் தூய உள்ளத்துடன் படித்தால் படிப்போரின் சார்பு மனப்பான்மையைத் தவிர்க்க முடியும் என்று கற்பனை செய்கின்றனர். ஆனால், காலத்தைத் திருப்ப முடியாது என்று அவர்கள் அறியும்போது, நம் எல்லோரையுமே பிழிந்து விடும் பேரழிவுக் காலம் வரும் என்று கனாக் காண்கின்றனர்.
மறைத்திரு டக்ளஸ் தோர்ப், நியூ யார்க் டைம்ஸில்.
*****
அமெரிக்க நாடு தன் 228 ஆண்டு சுதந்திர ஆட்சியில் 200 போர்களில் ஈடுபட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 22 நாடுகள்மேல் படையெடுத்திருக்கிறது. அடிமைச் சட்டங்களை ஒழித்த ஒன்றரை நூற்றாண்டு கழித்தும், குடியுரிமைச் சட்டங்கள் இயற்றிய 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் அமெரிக்காவில் இனப் போராட்டம் தொடர்கிறது. கருப்பர்களும் லத்தினோக்களும் வாழும் அமெரிக்க நகரச் சேரிகளில் போதை மருந்துகள், கூலிப்படைச் சண்டைகள், பொருளாதாரச் சீரழிவு தலை விரித் தாடுகிறது. இருப்பினும், ஆதிக்க வட்டங்கள் ஏன் என்று கேட்பதில்லை, விடை காணவும் முயல்வதில்லை. வரலாறு மீண்டும் திரும்பலாம்.
டாக்டர் காலெட் படார்·பி, அரபு நியூஸ் நாளேட்டில்.
***** |
|
சென்ற வசந்த காலத்தில் நான் இந்தியா சென்றபோது, விமான நிலையங்களில் பொது இடங்களில் பெண்களை தகாத இடத்தில் தொட்டுப் பரிசோதனை செய்யும் சிக்கலுக்கு இந்தியாவின் தெளிவான தீர்வைக் கண்டேன். ஒவ்வொரு விமான நிலையத்திலும், ஆண்களைப் பொது இடங்களிலும் பெண்களைத் திரை மறைவான அறையிலும் பரிசோதித்தனர். பெண்கள் அறையில் ஒரு பெண் அதிகாரி மரியாதையுடன் ஆனால் முழுமையாகப் பரிசோதித்தார். இந்திய முறை மரியாதையானது, திறனுள்ளது, வேலை செய்கிறது. நம்மை விட வசதிகள் குறைந்த, ஆனால் பெண்களைப் பெரிதும் போற்றும் ஒரு சமுதாயம் ஓர் எளிய தீர்வைக் கண்டிருக்கும்போது நாம் ஏனோ வழக்குகளிலும், நேர விரயத்திலும் உழன்று கொண்டிருக்கிறோம்.
நியூ யார்க் டைம்ஸ், ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில்.
*****
அமெரிக்க அரசாங்கத்தின் செயல்களைப் பிடிக்காத அமெரிக்கர்களும் இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த வலைத்தளத்தைத் தொடங்கினோம் என்கிறார் sorryeverybody.com என்ற வலைத் தளத்தைத் தொடங்கிய 20 வயது மாணவர் ஜேம்ஸ் ழெட்லென். "எங்களுக்கு வரும் கடிதங்களைப் பார்க்கும்போது எங்கள் வருத்தத்தை ஏற்றுக் கொள்பவர்களும் உலகில் இருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அதே நேரத்தில், இதுவும் வேடிக்கைதான்!" என்கிறார் இவர். ஆனால், அதிபர் புஷ்ஷின் ஆதரவாளர்கள் இந்த வலைத் தளத்துக்கு எதிர்த்தளங்கள் (werenotsorry.com போன்றவை) உருவாக்கியுள்ளார்கள்.
பி. பி. சி.
*****
51% வாக்குப் பங்கையெல்லாம் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கொண்டாட லாமா என்று கேட்கிறார்கள். இது அதிபர் கிளின்டனை விட அதிகமான பங்கு. 1988க்குப் பின் இதுதான் 50% தாண்டிய முதல் வெற்றி. தேசிய வாக்கு எண்ணிக் கையிலும் 3.5 மில்லியன் கூடுதல் மக்கள் அதிபர் புஷ்ஷை ஆதரித்திருக்கிறார்கள். மொத்த வாக்கு எண்ணிக்கையில் ரானால்டு ரேகனின் சாதனையையே விஞ்சியிருக்கிறார் புஷ். இப்போதாவது அவருக்குத் தர வேண்டிய மரியாதையைத் தருவார்களா மக்கள்?
லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், ஆசிரியருக்குக் கடிதம்.
*****
இராக் போர் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஒரு களம் என்று பெருவாரியான அமெரிக் கர்கள் கருத்துக் கணிப்பாளர்களிடம் சொல்லியிருக்கலாம். ஆனால், அனடோல் ·பிரான்ஸ் சொன்னது போல் "50 மில்லியன் மக்கள் முட்டாள்தனமாகப் பிதற்றினாலும், அது முட்டாள் தனம்தான்."
நியூ யார்க் டைம்ஸ், ஆசிரியருக்குக் கடிதம்
நெடுஞ்செவியன் |
|
|
More
மேடைநாடகம்- 'நாட்டக்' வழங்கிய ரகசிய சிநேகிதியே பிட்ஸ்பர்க்கில் பரதக்கலை ஜெயமணியின் சேவை! வாசகர் கடிதம்! தெரியுமா?
|
|
|
|
|
|
|