அவசரச் சமையல் அவசரச் சமையல் - அவல் உப்புமா தென்றல் ஸ்பெஷல் - பாதாம் கலந்த பழ கேக் கணத்தில் தயார் இட்லி, தோசை சன்னிவேலுக்கு வருகிறது உட்லண்ட்ஸ்
|
|
|
தேவையான பொருட்கள்
ரவை அல்லது சேமியா - 1 கிண்ணம் தண்ணீர் - 1 1/2 கிண்ணம் சமையல் எண்ணெய் (ஆலிவ் எண்ணெய்) - 1 1/2 மேசைக் கரண்டி நறுக்கிய வெங்காயம் - 1/8 கிண்ணம் உறைந்த காய்கறிக் கலவை (frozen mixed vegetables) - 1/4 கிண்ணம் கடுகு - 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு - தேக்கரண்டி பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 3 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி |
|
செய்முறை
ரவை அல்லது சேமியாவை எண்ணெய் விடாமல் ஓரு அடிபிடிக்காத பாத்திரத்தில் போட்டு வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். (இந்த வேலையை நேரம் கிடைக்கும் போது முன்னதாகவே செய்து வைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துக்கொண்டால் அவசரத்துக்கு உதவும்). பின்னர் இதை ஒரு தட்டில் கொட்டவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு மற்றொரு அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
அடிபிடிக்காத பாத்திரத்திலோ அல்லது அடி கனமான பாத்திரத்திலோ சமையல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்துக் கொண்டு, பச்சை மிளகாய், இஞ்சி போட்டுச் சற்று வதக்கவும்.
இதில் காய்கறிக் கலவையைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர், இன்னோர் அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரை இதில் கவனமாக ஊற்றவும்.
வறுத்த ரவையை (அல்லது சேமியாவை, அல்லது ரவையும் சேமியாவும் சேர்ந்த கலவையை) இதில் கொட்டி அடிபிடிக்கா மலும், கட்டிதட்டாமலும் கைவிடாமல் கிளறி இறக்கவும். சற்று ஆறியபின் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
அவசரச் சமையல் அவசரச் சமையல் - அவல் உப்புமா தென்றல் ஸ்பெஷல் - பாதாம் கலந்த பழ கேக் கணத்தில் தயார் இட்லி, தோசை சன்னிவேலுக்கு வருகிறது உட்லண்ட்ஸ்
|
|
|
|
|
|
|