SIFAவின் தியாகராஜ ஆராதனை லாஸ் ஏஞ்சலஸில் ஸ்ரீ தியாகப்பிரம்ம உத்ஸவம் பாலாஜி வேத மையத்தின் பொங்கல், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சுனாமி நிவாரண நிதி: நித்யா வெங்கடேஸ்வரனின் நாட்டிய நிகழ்ச்சி மிச்சிகனில் பொங்கல் விழா அனிதா வாசனின் பரத நாட்டியம் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற பொங்கல் விழா சுவாமி சுகபோதானந்தாவின் ஆன்மீகச் சொற்பொழிவுகள் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் வழங்கிய சுனாமி நிவாரணக் கலை நிகழ்ச்சி செயிண்ட் லூயியில் தியாகராஜ ஆராதனை
|
|
|
ஃபெப்ருவரி 6, 2005 அன்று வளைகுடாப் பகுதியின் கபர்லி அரங்கில் 'ராகமாலிகா'வின் மாணவ மாணவியர் 'பக்திமார்க்கம்' என்ற இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
இறை வணக்கத்தோடு தொடங்கியது நிகழ்ச்சி. தொடர்ந்து வந்த பஹ¤தாரி ராகத் திருப்புகழ் கூட்டிசை கேட்கக் கன ஜோர்.
தனிப் பாடல் பாடிய மாணவியின் 'பந்துவ ராளி' ஆலாபனை, 'அபராமபக்தி எந்தோ' கீர்த்தனையின் நிரவல், ஸ்வரம் யாவும் நறுக்குத் தெறித்தாற்போல இருந்தது. இரு மாணவர்கள் 'நீ தானப்பா' என்ற பாடலைச் சுகமாகப் பாடினர். |
|
ராஜராஜேஸ்வரி அஷ்டகம் நல்ல உச்சரிப்பு. சிதம்பர ஸ்துதியில் தில்லை நடராஜனைக் குறித்து ரேவதி ராகத்தில் பாடிய உருக்கமான பாடல் விறுவிறுப்பாக இருந்தது. எல்லா மாணவவர்களும் சேர்ந்து இறுதியாகப் பாடிய 'ஏறுமயில் ஏறி விளையாடுமுகம் ஒன்றே' வெகு இனிமை.
வயலின் வாசித்த இளம்பெண் முன்னுக்கு வருவார். வாசிப்பு கேட்க மிக இனிமை. குழந்தைகளுக்கேற்ற முறையில் அரவணைத்து வாசித்து நிகழ்ச்சியைக் களைகட்டச் செய்து விட்டார் மிருதங்க வித்வான். மொத்தத்தில் பக்தி ரசமும் பாவமும் சேர்ந்த இசை விருந்தாக அமைந்திருந்தது நிகழ்ச்சி. இதற்காக ராகமாலிகாவையும் ஆஷாவையும் பாராட்டியே ஆகவேண்டும்.
சீதா துரைராஜ் |
|
|
More