நிருத்யாஞ்சலியின் மூன்றாவது ஆண்டுவிழா ரம்யா வைத்யநாதனின் நடன அரங்கேற்றம் சிகாகோவில் பெண்கள் புற்றுநோய் விழிப்புணர்ச்சி 'எழுத்து வளர்ந்த கதை': சொற்பொழிவு நாடக விமர்சனம்: ஸ்ருதி பேதம்
|
|
|
·பெப்ருவரி 26, 2005 அன்று டெட்ராய்ட், மிச்சிகனில் உள்ள ஸ்ரீ பாலாஜி வேத மையமும், கிரேட் லேக்ஸ் ஆராதனைக் குழுவும் இணைந்து இசைக்குயில் M.S. சுப்புலட்சுமிக்கு ஓர் இசை அஞ்சலி நிகழ்த்தினார்கள். இறைவணக்கமாக 'ஹனுமான் சாலிஸா' மாலதி மற்றும் குழுவினர் பாடினார். தொடர்ந்து ராதா ஹரி அவர்கள் தொகுத்த எம்.எஸ்ஸின் வாழ்க்கைச் சரிதம் பற்றிய காட்சி அரிய புகைப்படங்களுடன், சுவையாக மனதைத் தொடும் விதத்தில் அமைந்தது.
அதன் பின்னர் ஸ்ரீகாந்த் மல்லஜோஸ்யுலா (குரலிசை), பவனி ஸ்ரீகாந்த் (வயலின்), ராஜசேகர் ஆத்மகுரி (மிருதங்கம்) ஆகியோர் இணைந்து சில அருமையான கீர்த்தனைகள் வழங்கினர். பிரபல கர்னாடக இசை வித்வான் மதுரை சுந்தர் (குரலிசை), கல்பனா வெங்கட் (வயலின்), வினோத் சீதாராமன்(மிருதங்கம்) குழுவினர் அடுத்து இசை வழங்கினர்.
இறுதியாக கிரேட் லேக்ஸ் ஆராதனைக் குழுவைச் சேர்ந்த டாக்டர். ரங்கசாமி அவர்கள் நன்றியுரை வழங்க, ஸ்ரீ பாலாஜி வேத மையத்தின் சார்பில் ஸ்ரீதர் வெங்கடாசாரி அவர்கள் கலைஞர்களை கௌரவிக்க, நிகழ்ச்சி நிறைவுபெற்றது. |
|
கல்பனா ஹரிஹரன் |
|
|
More
நிருத்யாஞ்சலியின் மூன்றாவது ஆண்டுவிழா ரம்யா வைத்யநாதனின் நடன அரங்கேற்றம் சிகாகோவில் பெண்கள் புற்றுநோய் விழிப்புணர்ச்சி 'எழுத்து வளர்ந்த கதை': சொற்பொழிவு நாடக விமர்சனம்: ஸ்ருதி பேதம்
|
|
|
|
|
|
|