விடைகள்1. இயலும்
9 + 99/99 = 10
99/9 - 9/9 = 10
★★★★★
2. கார் நிறுத்தும் இடத்தின் எண்களின் வரிசையைத் தலைகீழாகப் பார்த்தால் விடை கிடைக்கும்.
16 06 68 88 -- 98 = 86, -- 88, 89, 90, 91. ஆக வர வேண்டிய எண் = 87.
★★★★★
3. சகோதரர்கள் = மூவர்;
மொத்தக் கட்டிகள் = 11 = x முக்கால் பவுண்டு கட்டிகள் + x அரை பவுண்டு கட்டிகள் + x கால் பவுண்டு கட்டிகள்
மொத்தக் கட்டிகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும், ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தங்கத்தின் அளவும் சமமாக இருக்க வேண்டும் என்றால் அது கீழ்காணுமாறு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
முக்கால் பவுண்டு கட்டிகள் = 5 (3.75 பவுண்டு)
அரை பவுண்டு கட்டிகள் = 3 (1.5 பவுண்டு)
கால் பவுண்டு கட்டிகள் = 3 (0.75 பவுண்டு)
ஆக, மொத்தக் கட்டிகள் = 11 (மொத்தம் 6 பவுண்டு)
முதல் சகோதரனுக்குக் கிடைத்தது = 2 முக்கால் பவுண்டு கட்டிகள் + 1 அரை பவுண்டு கட்டி = 1.5 + 0.5 = 2 பவுண்டு
இரண்டாவது சகோதரனுக்குக் கிடைத்தது = 2 முக்கால் பவுண்டு கட்டிகள் + 1 அரை பவுண்டுக் கட்டி = 1.5 + .5 = 2 பவுண்டு
மூன்றாவது சகோதரனுக்குக் கிடைத்தது = 1 முக்கால் பவுண்டு கட்டி, 1 அரை பவுண்டு கட்டி, 3 கால் பவுண்டு கட்டி = 0.75 + 0.5 + 0.75 = 2 பவுண்டு
ஆக, சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த தங்கத்தின் அளவு = 2 பவுண்டு.
★★★★★
4. எண்களின் வரிசை கீழ்காணுமாறு அமைந்துள்ளது
3 2 = 7 = 3 (x) 2 + 1 = 7
5 4 = 23 = 5 (x) 4 + 3 = 23
7 6 = 47 = 7 (x) 6 + 5 = 47
9 8 = 79 = 9 (x) 8 + 7 = 79
இதுவரை வரிசை ஒற்றைப்படை எண்கள் முதலிலும் (3, 5, 7, 9) இரட்டைப் படை எண்கள் அடுத்துமாக (2, 4, 6, 8) அமைந்திருந்தது. அடுத்த வரிசையில் இரட்டைப் படை எண் முதலிலும் (10), ஒற்றைப்படை எண் அடுத்தும் (9) வருகிறது.
ஆகவே அடுத்து வரவேண்டிய எண் = 10 9 = ? = 10 (x) 9 + 8 = 98.
ஆக, விடுபட்ட இடத்தில் வரவேண்டிய எண் = 98.
★★★★★
5. பசுக்கள் = x; கோழிகள் = y.
அவற்றின் மொத்த எண்ணிக்கை = x + y = 74;
x பசுக்களின் கால் எண்ணிக்கை = 4x;
y கோழிகளின் கால் எண்ணிக்கை = 2y
4x + 2y = 196
2x + y = 98
2x + y = 98 (-)
x + y = 74
x = 24
y = (x + y) - x = 74 - 24 = 50
ஆக, பண்ணையில் இருந்த பசுக்களின் எண்ணிக்கை = 24; கோழிகளின் எண்ணிக்கை = 50.