கணிதப் புதிர்கள்
1. ஐந்து ஒன்பதுகளை மட்டும் பயன்படுத்தி கூட்டியோ, கழித்தோ, பெருக்கியோ, வகுத்தோ விடை 10 வரச் செய்ய இயலுமா?

2. கார் நிறுத்தும் இடத்தில் கீழ்க்கண்ட வரிசையில் எண்கள் எழுதப்பட்டிருந்தன. இதில் விடுபட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது, ஏன்?
16 06 68 88 -- 98

3. மூன்று சகோதரர்கள் கொண்ட குடும்பத்திற்கு அவர்களின் பூர்விகச் சொத்தாக 11 பவுண்டு தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றில் சில முக்கால் பவுண்டு கட்டிகள், சில அரை பவுண்டு கட்டிகள், சில கால் பவுண்டு கட்டிகள். கட்டியை உருக்கிச் சேதாரம் போக மீதமிருக்கும் தங்கத்தைத் தங்களுக்குள் சமமாகப் பிரித்துக் கொள்ளச் சகோதரர்கள் நினைத்தனர். ஆனால், அவர்களது மனைவிகளோ அவற்றை உருக்காமலேயே சமமாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று கூறி, பிரித்தும் காட்டினார்.
எப்படிப் பிரித்திருப்பர்? முக்கால், அரை, கால் கட்டிகளின் எண்ணிக்கை என்ன?

4. விடுபட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது, ஏன்?
3 2 = 7
5 4 = 23
7 6 = 47
9 8 = 79
10 9 = ?

5. ஒரு பண்ணையில் சில பசுக்களும் கோழிகளும் இருந்தன. அவற்றின் தலைகளின் எண்ணிக்கை 74; கால்களின் எண்ணிக்கை = 196 என்றால், கோழிகள் எத்தனை, பசுக்கள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com