சுனாமி நிவாரண நிதி: பண்டிட் விஸ்வமோகன் பட் வீணையிசை ஹபீப் கான் சரஸ்வதி ஆலயம்: ஹபீப் கான் - ரவிகிரண் இணைந்திசை
|
|
அமிருதவர்ஷிணியின் கீபோர்டு இசை |
|
- |மே 2005| |
|
|
|
'ஸ்பிரிங் நெக்டர்' நிறுவனத்தின் ஆதரவோடு அமிருதவர்ஷிணி முரளி கிருஷ்ணன் மே 14, 2005 அன்று மாலை 5:00 மணிக்கு ஹ¥வர் ஜூனியர் மிடில் பள்ளிக் கலையரங்கத்தில் (3501 Country Club Drive, Lakewood, CA 90712 USA) கீபோர்டு இசைநிகழ்ச்சி அளிக்க உள்ளார். அனுமதி இலவசம்.
இவர் கலி·போர்னியா மாநிலத்தில் உள்ள செரிடோஸ் உயர்நிலைப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி. தமது தந்தையும், கீபோர்டு வல்லுனருமான நா. முரளிகிருஷ்ணனிடம் இரண்டு வயதிலிருந்தே கீபோர்டு பழகி வந்து, ஐந்தாவது வயதில் 1994-ல் சான்டியாகோவில் அரங்கேற்றினார். அதன் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் கச்சேரிகள் செய்து வருகிறார். இந்த ஆண்டின் கோடைவிடுமுறையில் இவர் ஐரோப்பா, தென் ஆசிய மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் நிகழ்ச்சிகள் தர ஒப்புக் கொண்டுள்ளார்.
கர்நாடக சங்கீதத்தின் சிறப்பு அம்சமான கமக்கம் என்னும் அசைவுகளை இசைக்க இயலாத கருவி எனக் கூறிப் புறக்கணிக்கப்பட்ட வாத்தியமான கீபோர்டில் புதுவித உத்திகளைக் கையாண்டு நுண்ணிய கமக்க அசைவுகளை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சி மூலம் நிரூபித்தவர் தந்தை முரளிகிருஷ்ணன். Trinity Collge of Music, London-ல் பியோனோ இசை கற்றுத் தேர்ந்த வீணை வித்வான் இவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கர்நாடக சங்கீத இசையில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், Ethnomusicology துறையில் முதுகலைப் பட்டம் (சான்டியாகோ ஸ்டேட் பல்கலை) பெற்றார்.
அதன்பின் UCLA-வில் உலக இசையியலில் முனைவர் ஆய்வை முடித்துள்ளார்.
இவருக்குச் சரியான இசை வாரிசுதான் அமிருதவர்ஷிணி. நூறுக்கும் மேற்பட்ட மேடைக்கச்சேரிகளை உலகின் பல்வேறு பகுதிகளில் அளித்து கைதேர்ந்த இசை வல்லுனர்களையும் மேதைகளையும் பிரமிக்க வைத்திருக்கிறார். புகழ் வாய்ந்த பக்க வாத்திய வல்லுனர்களுக்குச் சரிசமமாக ஈடுகொடுத்து இவர் கீபோர்டு இசைப்ப தோடு, புன்னகையும், கலகலப்புமாக இவர் ரசிர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவது குறிப்பிடத்தக்கது.
எப்பேர்ப்பட்ட கடினமான தாளமாக இருந்தாலும் அதனை இடது கையால் போட்டுக்கொண்டு வலது கையால் கீபோர்டு வாசிப்பது இவரது தனிச்சிறப்பு.
அமெரிக்காவின் சிறந்த கலை அரங்குகளான கார்ப்பெண்டர்ஸ் நிகழ்கலை மையம், செரிடோஸ் நிகழ்கலைகள், UCC போவா அரங்கம், கெல்லி அருங்காட்சி மையம், கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை என்று பல முக்கிய இடங்களிலும் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். ஆஸ்கார் புகழ்பெற்ற ஷ்ரைன் அரங்கத்தில் ஏ.ஆர். ரகுமானின் LA-2000 இசை நிகழ்ச்சியில் வந்தே மாதரம், மற்றும் இந்திய தேசியகீதம் பாடச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். நாத மாலை, வீணை எக்ஸ்டஸி, தேனும் தினை, ராகமாலிகா போன்ற பல்வேறு இசைப் பேழைகளில் தமது கீபோர்டு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். |
|
உதவும் கரங்கள், Asha-LA, SPICMACAY, Tamil Rehabiliation Organisation (TRO) அமைப்பின் சுனாமி நிவாரணம், Corazon de Vida - Foundation for Orphans in Baka என்ற பலதரப்பட்ட 501(3)(c) வரிவிலக்கு நிறுவனங்களுக்குத் தமது கச்சேரிகள் மூலம் நிவாரண நிதி திரட்ட உதவியுள்ளார் அமிருதவர்ஷிணி.
தனது தந்தையிடம் வீணையும் பயின்று வருகிறார். எம்.எல். வசந்தகுமாரி அவர்களின் சீடர்களில் ஒருவரான ரோஸ் முரளிகிருஷ்ணன் அவர்களிடம் வாய்ப் பாட்டுப் பயில்வதோடு, அவரது மேடைக் கச்சேரிகளிலும் சேர்ந்து பாடுகிறார். இவர் மேற்கத்திய வாய்ப்பாட்டு, பியானோ இவற்றில் தேர்ச்சி பெற்று செரிடோஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் நகர மேயர்கள் முன்னிலையில் மேற்கத்திய இசை நிகழ்சசிகளை வழங்கியுள்ளார்.
'ஸ்பிரிங் நெக்டர்' சங்க இலக்கியம் முதல் புதுக்கவிதை வரை, கர்நாடக சங்கீதம் முதல் கிராமியக் கலை வரை, முத்தமிழின் பரிணாமங்களை அமெரிக்க மண்ணில் பரிமளிக்கச் செய்யத் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த நிறுவனத்தின் ஆதரவோடு அமிருதவர்ஷிணி மே 14, 2005 அன்று ஹ¥வர் கலையரங்கத்தில் கீபோர்டு நிகழ்ச்சி அளிக்க உள்ளார். விட்டல் ராமமூர்த்தி (வயலின்), நெய்வேலி நாராயணன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கவாத்தியம் வழங்க உள்ளனர்.
இவரது இசை நிகழ்ச்சி நிரலைக் காண: www.varshinimusic.com
ஸ்பிரிங் நெக்டர் குழு |
|
|
More
சுனாமி நிவாரண நிதி: பண்டிட் விஸ்வமோகன் பட் வீணையிசை ஹபீப் கான் சரஸ்வதி ஆலயம்: ஹபீப் கான் - ரவிகிரண் இணைந்திசை
|
|
|
|
|
|
|