|
கணிதப் புதிர்கள் |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2021| |
|
|
|
1. 105263157894736842 என்ற எண்ணை இதே எண்ணோடு ஒருமுறையும், அடுத்து மூன்று முறையும் கூட்டினால் என்ன விடை வருகிறது?
2. ஒரு பண்ணையில் சில குதிரைகளும் சில கோழிகளுமாகச் சேர்த்து மொத்தம் 24 இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 84 என்றால் குதிரைகள் எத்தனை, கோழிகள் எத்தனை?
3. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்? 101, 83, 67, 53, ........ ?
4. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 63. ஒன்றிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்தால் 9 விடையாக வருகிறது. ஒன்றோடு மற்றொன்றைப் பெருக்கினால் 972 வருகிறது. அந்த எண்கள் யாவை?
5. ஒரு வியாபாரி அரிசி மூட்டை ஒன்றை வாங்கினார். அவர் வாங்கியதும் அதன் விலை 25% அதிகரித்து விட்டது. விற்கும்போது அதன் விலை 20% சரிந்து விட்டது. அவருக்குக் கிடைத்தது லாபமா, நட்டமா?
அரவிந்த் |
|
விடைகள் 1. ஒரு முறை கூட்டல் : 105263157894736842 (+) 105263157894736842 --------------------- 210526315789473684 --------------------- வரிசையின் இறுதி இலக்கமான எண் ”2” விடையில் முன் வரிசைக்குச் செல்ல, மற்ற எண்கள் அதே வரிசையில் மாறாமல் தொடர்கின்றன. மூன்று முறை கூட்டல் 105263157894736842 (+) 105263157894736842 105263157894736842 105263157894736842 --------------------- 421052631578947368 --------------------- இறுதி இலக்கங்களான எண் ”42” முன் வரிசைக்குச் செல்ல, மற்ற எண்கள் அதே வரிசையில் மாறாமல் இருக்கின்றன.
2. குதிரைகள் = x; கோழிகள் = y. அவற்றின் மொத்த எண்ணிக்கை = x + y = 24; ஒவ்வொரு குதிரையின் கால்களின் எண்ணிக்கை = 4 = 4x; ஒவ்வொரு கோழியின் கால்களின் எண்ணிக்கை = 2 = 2y 4x + 2y = 84; x + y = 24; x = 24 - y 4x + 2y = 84 = 4 (24 - y) + 2y = 84 96 - 4y + 2y = 84 -2 y = 84 - 96 = - 12 y = 6 x = 24 - y = 24 - 6 = 18 ஆக, பண்ணையில் இருந்த கோழிகளின் எண்ணிக்கை = 6; குதிரைகளின் எண்ணிக்கை = 18.
3. வரிசை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது. 101 = 102 + 1; 83 = 92 + 2; 67 = 82 + 3; 53 = 72 + 4; ஆகவே அடுத்து வர வேண்டிய எண் = 62 + 5 = 41
4. a + b = 63 (-) a - b = 9 --------------------- 2a = 54 --------------------- a = 27 ஃ b = 63-a = 63-27 = 36 ab = 27 x 36 = 972
5. வியாபாரி வாங்கிய விலை = 100 என்க. அதிகரித்த விலை = 25% = 100 + 25 = 125. அவர் விற்றபோது சரிவு = 20% = 125*20% = 25; 125-25 = 100.00 நூறு ரூபாய்க்கு அரிசி மூட்டையை வாங்கிய வியாபாரி, அதே 100 ரூபாய்க்கு விற்றதால் அவருக்கு லாபமும் இல்லை; நஷ்டமும் இல்லை. |
|
|
|
|
|
|
|