கணிதப் புதிர்கள்
1. 105263157894736842 என்ற எண்ணை இதே எண்ணோடு ஒருமுறையும், அடுத்து மூன்று முறையும் கூட்டினால் என்ன விடை வருகிறது?

2. ஒரு பண்ணையில் சில குதிரைகளும் சில கோழிகளுமாகச் சேர்த்து மொத்தம் 24 இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 84 என்றால் குதிரைகள் எத்தனை, கோழிகள் எத்தனை?

3. வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?
101, 83, 67, 53, ........ ?

4. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 63. ஒன்றிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்தால் 9 விடையாக வருகிறது. ஒன்றோடு மற்றொன்றைப் பெருக்கினால் 972 வருகிறது. அந்த எண்கள் யாவை?

5. ஒரு வியாபாரி அரிசி மூட்டை ஒன்றை வாங்கினார். அவர் வாங்கியதும் அதன் விலை 25% அதிகரித்து விட்டது. விற்கும்போது அதன் விலை 20% சரிந்து விட்டது. அவருக்குக் கிடைத்தது லாபமா, நட்டமா?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com