விடைகள்1. இரண்டு வரிசைகளின் தொகுப்பாக இந்த எண் வரிசை அமைந்துள்ளது.
முதல் எண் வரிசை = 1, 8, 81, ... ; வரிசை அதன் அடுக்கு மடங்குகளில் அமைந்துள்ளது. 12 (1*1=1), 23 (2*2*2=8) 34 (3*3*3*3=81) என்ற வரிசையில் அடுத்து வர வேண்டியது 45 (4*4*4*4*4=) = 1024.
இரண்டாவது எண் வரிசை = 1, 3, 5... என்ற ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது. அதன்படி அடுத்து வர வேண்டிய எண் = 7
ஆக, மேற்கண்ட வரிசையில் வர வேண்டிய எண்கள் = 1024, 7
2. முதல் எண் = எப்போதும் எங்கும் முதலாய் வரும் எண் = 1
இரண்டாவது எண் = மூன்றாவது எண்ணின் தலைகீழ் எண் = 6 (மூன்றாவது எண் 9 ஆக இருந்தால் மட்டும்) அல்லது 9 (மூன்றாவது எண் 6 ஆக இருந்தால் மட்டும்)
நான்காவது எண் = இரண்டாவது எண்ணில் பாதி = இரண்டாவது எண் 9 என்று வந்தால் இது பொருந்தாது. ஆகவே இரண்டாவது எண் 6 என எடுத்துக் கொண்டால் அதில் பாதி = 3
ஆக அந்த நான்கு இலக்க எண் = 1693.
3. ஐந்து காலியான குளிர்பான பாட்டில்கள் = ஒரு முழு குளிர்பான பாட்டில்
100 காலியான குளிர்பான பாட்டில்கள் (100/5=20) = 20 முழு குளிர்பான பாட்டில்
20 காலியான குளிர்பான பாட்டில்கள் (20/5=4) = 4 முழு குளிர்பான பாட்டில்
100 போக ஏற்கனவே மீதம் இருந்த காலியான பாட்டில் = 1 + தற்போதைய காலியான பாட்டில்கள் = 4. மொத்தம் 5 காலியான குளிர்பான பாட்டில்கள் = 1 முழு குளிர்பான பாட்டில்
ஆக பாபுவுக்கு மொத்தம் 20 + 4 + 1 என மொத்தம் 25 முழு குளிர்பான பாட்டில்கள் கிடைத்திருக்கும்.
4. முதல்நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x
இரண்டாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 6
மூன்றாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 12
நான்காம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 18
ஐந்தாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 24
ஆறாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 30
ஏழாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 36
எட்டாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 42
ஒன்பதாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 48
பத்தாம் நாள் போட்ட நாணயங்களின் எண்ணிக்கை = x + 54
ஆக மொத்த நாணயங்களின் எண்ணிக்கை = 10x + 270 = 310.
10x = 310 - 270 = 40;
10x = 40;
x = 4.
ஆகவே ராமு முதல்நாள் 4 நாணயங்களையும், பத்தாம் நாள் வரை 10, 16, 22, 28, 34, 40, 46, 52, 58 என மொத்தம் 310 நாணயங்களையும் உண்டியலில் போட்டிருப்பான்.
5. இயலும். 33 - 3 + (3/3) = 31