கணிதப் புதிர்கள்
1. 1, 1, 8, 3. 81, 5, ...., .... வரிசையில் அடுத்து வரக் கூடிய எண்கள், எவை ஏன்?

2. அது ஒரு நான்கு இலக்க எண். முதல் எண் எப்போதும் எங்கும் முதலாய் வருவது. இரண்டாவது எண் மூன்றாவது எண்ணின் தலைகீழ் எண்ணாக உள்ளது. நான்காவது எண், இரண்டாவது எண்ணில் பாதி என்றால் அந்த எண் எது?

3. காலியான ஐந்து குளிர்பான பாட்டில்களைக் கொடுத்தால், கடைக்காரர் பாபுவுக்கு ஒரு முழுக் குளிர்பான பாட்டிலைத் தருவார். பாபு அந்த மாதத்தில் 101 காலியான குளிர்பான பாட்டில்களைக் கொடுத்தான் என்றால் அவனுக்கு எத்தனை முழுக் குளிர்பான பாட்டில்கள் கிடைத்திருக்கும்?

4. ராமுவிடம் 310 டாலர் நாணயங்கள் இருந்தன. அவற்றை தினந்தோறும் அவன் தனது உண்டியலில் போட்டு வந்தான். முதல்நாள் எத்தனை நாணயங்களை உண்டியலில் போட்டானோ அதைவிட 6 நாணயங்கள் அதிகமாக அடுத்த நாள் போடுவான். பத்தாம் நாள் உண்டியலில் காசு போட்டதும் அவனது கையிருப்பு தீர்ந்துவிட்டது என்றால் அவன் தினந்தோறும் எத்தனை நாணயங்களை உண்டியலில் செலுத்தி வந்திருப்பான்?

5. கணிதச் சமன்பாடுகளைக் கொண்டு, 3 என்ற எண்ணை 5 முறை மட்டும் பயன்படுத்தி விடையாக எண் 31 வரச்செய்ய வேண்டும். இயலுமா?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com