Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஆஸ்டின் கிளை நிதி திரட்டும் நிகழ்ச்சி
- சந்திரசேகர் காயாம்பூ|நவம்பர் 2020|
Share:
அக்டோபர் 2, 2020 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆஸ்டின் கிளை Lighter Loads ATX மற்றும் Hungry Souls சேவை அமைப்புகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. 5K குடும்பத்தினர் ஓட்டம் மற்றும் வாக்கதான் 2020 நிகழ்ச்சிகள், டாக்டர் பழனியப்பன் (பால்) மாணிக்கம், எம்.டி. அவர்களின் 'எப்படி உங்கள் நேரத்தை முன்னுரிமைப் படுத்துவது' என்ற மெய்நிகர் உரையுடன் தொடங்கியது. டாக்டர் பால் இணையவழியே பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

5K மற்றும் பைக் பங்கேற்பாளர்கள் டி.என்.எஃப் இணையதளத்தில் தங்கள் 5 கி.மீ. நடை மற்றும் ஓட்டத்துக்கான நேரத்தைப் பதிவு செய்தனர். மொத்தம் 117 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அக்டோபர் 11ஆம் தேதி டாக்டர் ராஜ் ரகுநாதன் ஆற்றிய 'கோவிட் காலங்களில் மகிழ்ச்சியின் பங்கு' உரையுடன் நிறைவு விழா மாலை 6 மணிக்குத் தொடங்கியது. டாக்டர் ராஜ் பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Lighter Loads ATX தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் & லாரா ரிச்சி மற்றும் Hungry Souls தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் கிங் ஆகியோரும் இணையவழி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



அறக்கட்டளை தலைவர் திருமதி உஷா சந்திரா நம் அமைப்பின் நோக்கம், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இது பலர் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பவை பற்றிப் பேசினார். இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கும் காசோலையை வழங்கினார்.

போட்டியில் வெற்றிபெற்றோரை திருமதி உஷா சந்திராவும், டாக்டர் ராஜ் ரகுநாதனும் வாழ்த்தினர். 11 ஸ்பான்சர்கள், 102 நன்கொடையாளர்கள் உதவியுடன் 41 தன்னார்வலர்கள் இணைந்து $24280 திரட்டினர். பயனாளி அமைப்புகளின் ஜேம்ஸ் மற்றும் லாரா ரிச்சி மற்றும் கிறிஸ் கிங் நமது அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்ததுடன் திரட்டிய நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதையும் கூறினர்.

நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது.
சந்திரசேகர் காயாம்பூ,
ஆஸ்டின், டெக்சஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline