பண்டிட் ஜஸ்ராஜ் சுதாங்கன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
|
|
அம்புலிமாமா சங்கர் |
|
- |அக்டோபர் 2020| |
|
|
|
|
கே.சி. சிவசங்கரன் என்ற ஒவியர் சங்கர் (96) சென்னையில் காலமானார். 'தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமனை' அம்புலிமாமாவிற்காக வரைந்து 'அம்புலிமாமா' சங்கர் ஆனார். தாராபுரம் அருகே உள்ள காலத்தொழுவூர் கிராமத்தில், ஜூலை 19, 1924 அன்று பிறந்தார். அப்பைய தீக்ஷிதர் பரம்பரையில் வந்த இவருக்கு இளவயதிலேயே ஓவிய ஆர்வம் வந்துவிட்டது. ஓவியப் பள்ளியில் (தற்போது ஓவியக் கல்லூரி) பயின்றார். படித்து முடித்ததும் 'கலைமகள்' இதழில் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பின் அம்புலிமாமாவுக்கு வரையும் வாய்ப்பு தேடி வந்தது. 1953ல் அம்புலிமாமாவில் சேர்ந்தார். அந்த இதழ் நின்று போகும் வரை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வரைந்திருக்கிறார். ராமகிருஷ்ண விஜயம் இதழுக்குத் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தவர். தனது ஓவிய சாதனைகளுக்காக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' உள்பட பல்வேறு சிறப்புகள் பெற்றவர்.
அவரது சுவையான நேர்காணலை வாசிக்க |
|
ஒரு ரிஷியைப்போல வாழ்ந்த சங்கர், இலக்கியம், வேதம், புராணம், சாஸ்திரம் போன்றவற்றில் ஆழமான பயிற்சி உடையவர். ரமண மஹரிஷியின் பக்தர். |
|
|
More
பண்டிட் ஜஸ்ராஜ் சுதாங்கன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
|
|
|
|
|
|
|