விடைகள்1. இரண்டு எண் வரிசைகளின் தொடர்ச்சியாக இவ்வரிசை அமைந்துள்ளது. முதல் வரிசை 23, 24... என எண்களின் ஏறு வரிசையிலும், அடுத்த எண் வரிசை 23, 22, என இறங்கு வரிசையிலும் அமைந்துள்ளது. இதன் படி அடுத்து வர வேண்டிய எண் = 25.
2. ஆப்பிள் = x; ஆரஞ்சு = y; மாம்பழம் = z
x + y + z = 60
ஆரஞ்சைப்போல ஆப்பிள்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு என்றால் x = 4y
மாம்பழங்களின் எண்ணிக்கை ஆரஞ்சைவிட 6 அதிகம் என்றால் = z = y + 6
x + y + z = 60 = 4y + y + y + 6 = 60
6y + 6 = 60
6y = 60 - 6 = 54
y = 54/6 = 9
x = 4y = 4 * 9 = 36;
z = y + 6 = 9 + 6 = 15
ஆக கூடையில் இருந்த பழங்களில் ஆப்பிள் = 36; ஆரஞ்சு = 9; மாம்பழம் = 15.
3. காலை 6.00 மணி துவங்கி மாலை 6.00 மணி வரை பன்னிரண்டு மணி நேரம். ஆனால், முட்கள் 12 முறை சந்திக்காது.
காலை 6.00 மணி துவங்கி முட்கள் 7.35க்கு முதல்முறை சந்திக்கும். அடுத்து 8.40க்கு, 9.45க்குச் சந்திக்கும். இறுதியாக 5.25 என மாலை 6.00 மணி வரை 11 முறை சந்தித்துக் கொள்ளும்.
4. மாணவர்கள் = x; பணம் = y
x * y = 1521
மாணவர்களின் எண்ணிக்கை = பணத்தின் எண்ணிக்கை = சமம் = y = x
x * x = x^2 = 1521
x = 39.
ஆக, 39 மாணவர்களுக்கு தலா 39 டாலர் பரிசாக அளிக்கப்பட்டது.
5. ராகேஷிடம் இருந்த சாக்லேட்டுக்கள் x
லோகேஷிடம் இருந்தது = 2x
யோகேஷிடம் இருந்தது = 2(2x) = 4x
மொத்த சாக்லேட்டுக்கள் = 56
x + 2x + 4x = 56
7x = 56
x = 8
ஆக, ராகேஷிடம் இருந்த சாக்லேட்டுக்கள் = 8; லோகேஷிடம் = 2x = 16; யோகேஷிடம் = 4x = 32. மொத்தம் = 56