|
|
1) ஒரு வகுப்பிலிருந்த 36 மாணவர்களின் சராசரி வயது 18. மாணவர்கள் வயதுடன் ஆசிரியரின் வயதையும் சேர்த்தால் சராசரி 19 ஆகிறது. ஆசிரியரின் வயது என்ன?
2) 9, 9, 8, 9, 7, 9, 6 ..... வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
3)ஒரு சதுர வேலியை அமைக்க ஒவ்வொரு பக்கத்திற்கும் 26 தூண்கள் தேவைப்படுகின்றன என்றால் இரண்டு தொடர் சதுர வேலிகளை அமைக்க மொத்தம் எத்தனை தூண்கள் தேவைப்படும்?
4) 4913, 13 இந்த இரு எண்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகள் என்ன?
5) ஒரு தோப்பில் ஒவ்வொரு 6 தென்னை மரங்களுக்கும் 3 மாமரங்களை நட்டுள்ளனர். மாமரங்களின் எண்ணிக்கையை விடத் தென்னை மரங்களின் எண்ணிக்கை 24 அதிகம் என்றால் அந்தத் தோப்பில் இருந்த மாமரங்கள் எத்தனை, தென்னை மரங்கள் எத்தனை?
அரவிந்த் |
|
விடைகள் 1) மாணவர்களின் எண்ணிக்கை = 36 மாணவர்களின் மொத்த வயது = 36 x 18 = 648 ஆசிரியர் + மாணவர்களின் மொத்த வயது = 37 x 19 = 703 ஆசிரியரின் வயது = 703 - 648 = 55
2) வரிசை இரண்டு விதமாக அமைந்துள்ளது. முதல் வரிசை - 9, 8, 7, 6; இரண்டாம் வரிசை 9, 9, 9, 9. ஆக அடுத்து வரவேண்டிய எண் = 9.
3) ஒரு பக்கத்திற்கு 26 தூண்கள். நான்கு பக்கத்திற்கு 26X4 = 104;
சதுரம் என்பதால் முதல் தூணே அடுத்த வரிசைக்கும் முதல் தூணாக இருக்கும் அதன் படி 104-4 = 100 தூண்கள் தேவைப்படும். இரண்டு வேலிகள் அமைக்க 2X100 = 200 தூண்கள் தேவைப்படும். ஆனால் தொடர் சதுரம் என்பதால் ஒரு வரிசைத் தூண்களே இரண்டு சதுரங்களுக்கும் பொதுவாக அமையும். அதன்படி 200-24 = 176; மொத்தம் 176 தூண்கள் தேவைப்படும்.
4) 4 + 9 + 1 + 3 = 17; அது மட்டுமல்ல; 17^3= 17 x 17 x 17 = 4913
5) ஒவ்வொரு ஆறு தென்னை மரத்திற்கும் மூன்று மாமரங்கள் என்றால் = மாமரங்கள்/தென்னை மரங்கள் = 3/6 = 6/12 = 12/24 = 24/48. மாமரங்களை விட தென்னை மரங்களின் எண்ணிக்கை 24 அதிகம் = 48 - 24 = 24; ஆக, தென்னை மரங்கள் = 48 மாமரங்கள் = 24. |
|
|
|
|
|
|
|