பொட்டுக்கடலை பச்சடி
|
|
|
|
தேவையான பொருட்கள் கீன்வா - 1/2 கிண்ணம் பார்லி - 1/2 கிண்ணம் சியா (Chia) விதை - 1/2 கிண்ணம் சூரியகாந்தி விதை - 1/2 கிண்ணம் பரங்கி விதை - 1/2 கிண்ணம் ஆளிவிதை (Flax seed) - 1/2 கிண்ணம் பாதாம் பருப்பு - 1 கிண்ணம்
செய்முறை மேலே கூறிய பொருட்களைத் தனித்தனியாக வாணலியில் சூடுவர வறுக்கவும். மிக்ஸியில் போட்டு பாதாம் சேர்த்துக் கரகரப்பாகப் பொடிக்கவும். இது நான்கு மாதம்வரை கெடாமலிருக்கும். இதைத் தோசை, இட்லி, சப்பாத்தி, குருமா வகைகளுடன் தேவைக்கேற்பச் சேர்க்கலாம்.
இந்தக் கலவையுடன் ஜாம் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கலந்து ரொட்டியின்மேல் தடவிச் சாப்பிடலாம். வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, லட்டு போலச் செய்து உண்ணலாம். சரியாகச் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்துக்கொடுத்தால் நிறையச் சத்து கிடைக்கும். |
|
கி்ருஷ்ணவேணி, ஃபேர்ஃபாக்ஸ், வர்ஜினியா |
|
|
More
பொட்டுக்கடலை பச்சடி
|
|
|
|
|
|
|