பொட்டுக்கடலை வடை
|
|
|
|
பொட்டுக்கடலையை 'கிச்சன் புலி' என்று சொல்வார்கள். அதை வைத்து அவ்வளவு வகை சாப்பாட்டு ஐட்டங்கள் செய்யலாம். புரோட்டின் சத்து நிறைந்தது. பொட்டுக்கடலை இனிப்புருண்டை செய்வது பற்றிப் பார்ப்போமா?
தேவையான பொருட்கள் பொட்டுக்கடலை - 1 கிண்ணம் அவல் - 1/4 கிண்ணம் பாதாம் - 6 முந்திரிப் பருப்பு - 10 தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் கருப்பட்டி அல்லது வெல்லம் (பொடித்தது) - 3/4 கிண்ணம் ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி நெய் - 1/4 கால் கிண்ணம் கசகசா - 1 தேக்கரண்டி
செய்முறை பொட்டுக்கடலை, அவல் இரண்டையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும். தேங்காய்த் துருவலைச் சிவக்க வறுத்து கசகசா, பாதாம், முந்திரியை தனித்தனியாக வறுத்துப் பொடிசெய்யவும். அவல், பொட்டுக்கடலைப் பொடி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஏலக்காய்த்தூள் சேர்த்து, வெல்லம் அல்லது கருப்பட்டித் தூள் சேர்க்கவும். நெய்யை வாணலியில் நன்றாகச் சுடவைத்து ஊற்றி உருண்டை பிடிக்கவும். இந்த உருண்டை மிகச் சுவையானது. |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்ஸி |
|
|
More
பொட்டுக்கடலை வடை
|
|
|
|
|
|
|