வெண்டைக்காய் ஸ்பெஷல் வெண்டைக்காய் தயிர் பச்சடி வெண்டைக்காய் கறி வெண்டைக்காய் வெங்காய கறி வெண்டைக்காய் சாதம் பதப்படுத்திய (frozen) வெண்டைக்காய் கறி வெண்டைக்காய் மோர்க்குழம்பு வெண்டைக்காய் கிரேவி
|
|
|
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 20 மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி கரம் மசாலாபொடி - 1/2 தேக்கரண்டி தனியா பொடி - 1/2 தேக்கரண்டி சீரக பொடி - 1 தேக்கரண்டி காய்ந்த மாங்காய் பொடி (amchur powder)- 1/2 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு தண்ணீர் - 1/4 கிண்ணம் சமையல் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி |
|
செய்முறை
வெண்டைக்காய்களை நன்றாக கழுவி பின்னர் அவற்றின் நுனியையும் அடியையும் சிறிதளவு வெட்டி எறிந்து விட்டு பின்னர் மேலேயும் கீழேயும் சிற்து விட்டு விட்டு நெடுக்காக ஒரு வெட்டு வெட்டவும். வெண்டைக்காய் இரு துண்டுகளாக ஆகாமல் பார்த்துக் கொள்ளவும்.
மைக்ரோவேவில் வைக்ககூடிய ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வெண்டைக் காய்களை போடவும். பின்னர் மேலே கூறியுள்ள எல்லா பொருட்களையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். மைக்ரோவேவில் உபயோகிக்கக் கூடிய ஒரு மூடியால் இதை சற்று இடைவெளிவிட்டு மூடி அதிக திறனில் (high Power) 8 நிமிடங்கள் வைக்கவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து ஒரு மரக்கரண்டியால் லேசாக கிளறிவிடவும், வெண்டைக்காய் உடைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
மிகவும் காய்ந்து நீர் வற்றி இருந்தால் சற்று தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம். 8 நிமிடங்களுக்கு பின்னர் மூடியை எடுத்து விட்டு அதிக் திறனில் (வெண்டைக்காய் வதங்கும் வரை) வேக வைக்கவும். சற்று கவனத்துடன் செய்தால் இது மிக எளிதாக் செய்யக்கூடிய முறையாகும்.
இதையும் சப்பாத்தி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
வெண்டைக்காய் ஸ்பெஷல் வெண்டைக்காய் தயிர் பச்சடி வெண்டைக்காய் கறி வெண்டைக்காய் வெங்காய கறி வெண்டைக்காய் சாதம் பதப்படுத்திய (frozen) வெண்டைக்காய் கறி வெண்டைக்காய் மோர்க்குழம்பு வெண்டைக்காய் கிரேவி
|
|
|
|
|
|
|