சான் அன்டோனியோ: தீபாவளிக் கொண்டாட்டம் ரொறொன்ரோ: ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி ஃபார்மிங்டன் ஹில்ஸ்: விஸ்வரூப ஸ்ரீ பக்த ஹனுமான் பாரதி தமிழ்ச் சங்கம்: 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகம் அரங்கேற்றம்: அனிகா காஞ்சி ஹார்வர்டு தமிழ் இருக்கை: 'இதய கீதம்' ஸ்ரீ லலித கான வித்யாலயா: வெள்ளி விழா அரங்கேற்றம்: அதிதி கிருஷ்ணன் அரங்கேற்றம்: நேஹா சிந்து சிவராமன் அரங்கேற்றம்: ஷ்ரத்தா ராம்நாத் அரங்கேற்றம்: ஸ்ருதி ஸ்ரீதர் கச்சேரி: சுவேதா சுப்பையா ஆனந்தநாராயண பாகவதர் நாமசங்கீர்த்தன யாத்திரை இரட்டை அரங்கேற்றம்: மஹதி ஆத்ரேயா, ஹரிஹரன் சண்முகம்
|
|
செவிலியர் தலைமைத்துவ மாநாடு |
|
- மஹாதேவ் தேசாய், ஜெயா மாறன்|நவம்பர் 2017| |
|
|
|
|
செப்டம்பர் 16, 2017 அன்று ஜார்ஜியா இந்தியச் செவிலியர் சங்கம் (The Georgia Indian Nurses Association) தேசிய அளவிலான செவிலியர் தலைமைத்துவ மாநாட்டை, நார்க்ராஸ், ஜார்ஜியாவிலுள்ள ஏஷியானா உணவகத்தின் இம்பாக்ட் அரங்கத்தில் நடத்தியது. தலைமைத்துவப் பண்புகளால் சொந்த வாழ்க்கையையும், தொழிலையும் மேம்படுத்திக் கொள்வது எப்படி என்பதுதான் மாநாட்டின் மையக்கரு. பல உள் மற்றும் வெளி மாநில உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
ஜெனீ ன் மெதேன் மற்றும் தீப்தி வர்கீஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். Dr. ஜேக்கி மைக்கல் (President, National Association of Indian Nurses of America) உரையாற்றித் துவங்கி வைத்தார். அடுத்ததாக Dr. இந்திரகிருஷ்ணன் மருத்துவத் துறையில் செவிலியர் ஆற்றும் மகத்தான பங்கைப் பாராட்டிப் பேசினார். பிறகு பல முக்கியப் பிரமுகர்கள் குத்துவிளக்கேற்ற Emory Johnscreek மருத்துவமனையின் தலைவர் மெரிலின் மார்கோலிஸ், செவிலியர் தமக்குள் இருக்கும் தலைமைப் பண்பைக் கண்டுபிடித்து வெளிக்கொணர வேண்டுமென உரையாற்றினார். இதுதான் மாநாட்டின் முக்கிய உரையாக அமைந்தது. செவிலியர்தம் ஆர்வத்தைக் கண்டறிந்து, நிறுவனங்களின் Dr. ரெபேக்கா வீலர், தலைமைக் குழுவில் பங்கேற்றுத் திறம்படச் செயலாற்றுவது எப்படி என்ற தலைப்பிலும்; Dr. லதா ஜோசஃப் தலைமைத்துவப் பண்பை வளர்த்துக் கொள்ள தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற தலைப்பிலும்; ஷைனி மூஞ்செலி, மினி ஜேக்கப் மற்றும் லில்லி அணிக்கட் ஆகியோர், தலைவர்களையும், மேலாளர்களையும் சரியாகப் பிரித்துப் பார்த்து புரிந்துகொள்வது எப்படி என்ற தலைப்பிலும் பயிற்சிப் பட்டறை நடத்தினர். இன்னும் பல காணொளிகளை செவிலியர் பலரும் வழங்கினர். Dr. ஜேக்கி மைக்கலும், வித்யா கனகராஜும் (தலைவர், ஜார்ஜியா இந்தியச் செவிலியர் சங்கம்) நன்றி கூறினர். |
|
மாலை நிகழ்ச்சியில் செனட்டர். ரெனே அட்டர்மன் (Health & Human Services – District 45, GA) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பின்னர், இந்தியாவின் பல மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேறின.
ஆங்கிலத்தில்: மஹாதேவ் தேசாய் தமிழாக்கம்: ஜெயா மாறன், அட்லாண்டா, ஜார்ஜியா |
|
|
More