ரொறொன்ரோ: ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி ஃபார்மிங்டன் ஹில்ஸ்: விஸ்வரூப ஸ்ரீ பக்த ஹனுமான் பாரதி தமிழ்ச் சங்கம்: 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகம் அரங்கேற்றம்: அனிகா காஞ்சி ஹார்வர்டு தமிழ் இருக்கை: 'இதய கீதம்' ஸ்ரீ லலித கான வித்யாலயா: வெள்ளி விழா செவிலியர் தலைமைத்துவ மாநாடு அரங்கேற்றம்: அதிதி கிருஷ்ணன் அரங்கேற்றம்: நேஹா சிந்து சிவராமன் அரங்கேற்றம்: ஷ்ரத்தா ராம்நாத் அரங்கேற்றம்: ஸ்ருதி ஸ்ரீதர் கச்சேரி: சுவேதா சுப்பையா ஆனந்தநாராயண பாகவதர் நாமசங்கீர்த்தன யாத்திரை இரட்டை அரங்கேற்றம்: மஹதி ஆத்ரேயா, ஹரிஹரன் சண்முகம்
|
|
சான் அன்டோனியோ: தீபாவளிக் கொண்டாட்டம் |
|
- ஷீலா ரமணன்|நவம்பர் 2017| |
|
|
|
|
அக்டோபர் 21, 2017 அன்று சான் அன்டோனியோ தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி விழா OLLU, Thiry அரங்கில் கொண்டாடப்பட்டது. தமிழ்க் குடும்ப ஆண்கள் பட்டு வேஷ்டி-சட்டை, பெண்கள் சுடிதார், சல்வார், பட்டுப்புடவை, குழந்தைகள் பட்டுப்பாவாடை, ,பஞ்சகச்சம் என ஒரே அசத்தலாக வந்தனர். உள்ளூர் வாசிகள் பலர் இந்திய உடையில் பங்கேற்றனர். வெளியே நிறைய ஸ்டால்கள் போடப்பட்டிருந்தன. பெண்களுக்கு மல்லிகைப்பூ கிடைத்தது. டிஸ்கோ, வெஸ்டர்ன்,பரதம், கர்நாடக சங்கீதம், திரைப்பாடல் என்று கலைநிகழ்ச்சிகள் கலகலப்பாக இருந்தன.
டாலஸிலிருந்து வந்திருந்த 'Sound O'Rama's என்ற இசைக்குழு சிறந்த இசைவிருந்து படைத்தது. கலைஞர்களோடு சேர்ந்து உள்ளூர்க்காரர்களும் மேடையேறி பாட்டுப்பாடி, நடனமாடி மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தினர். தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. ராஜகுரு, செயலர் திரு. கார்த்திகேயன் மற்றும் உறுப்பினர்களும், தொண்டர்களும் சிறப்பாகத் திட்டமிட்டு நன்கு நடத்தி முடித்தனர். சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு. விஜய் பார்த்தசாரதிக்கு நினைவுப் பரிசை ராஜகுருவும், கார்த்திகேயனும் வழங்கி கெளரவித்தனர். |
|
முன்னதாகத் தமிழ்ச்சங்கம் யோகப்பயிற்சி முகாம், நடனப்பயிற்சி முகாம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்க நிதி திரட்டல் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்திருந்தது. கோடை விடுமுறையில் ஆண், பெண், குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. வென்றோருக்குப் பரிசுகளும் தொண்டர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
வரும் டிசம்பர் மாதத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.
ஷீலா ரமணன், சான் அன்டோனியோ, டெக்சஸ் |
|
|
More