NETS: பொங்கல்விழா விபா-சிகாகோ: பசித்த குழந்தைக்குச் சத்துணவு STF: திருக்குறள் போட்டிகள் டொரான்டோ: முதல் தமிழர் மரபு மாநாடு 2017 அட்லாண்டா: பொங்கல் விழா சான் அன்டோனியோ: பொங்கல் விழா சிகாகோ: பொங்கல் விழா
|
|
ஹூஸ்டன்: நிதி திரட்டும் நிகழ்ச்சி |
|
- தினகர்|மார்ச் 2017| |
|
|
|
|
ஹூஸ்டன் மாநகர பாரதி கலைமன்றம் 17 ஆண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றது. மேற்கு ஹூஸ்டன், பியர்லேண்ட், சுகர்லேண்ட், கேட்டி, சைப்ரஸ் பகுதிகளில் 5 கிளைகள் இயங்குகின்றன. பாலர், மழலை மற்றும் 1 முதல் 8 நிலைகளில் 300 மாணவர்கள் பயில்கிறார்கள்.
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் இந்தத் தமிழ்ப் பள்ளிகளுக்கு டெக்சஸ் அரசு அங்கீகாரம், உயர்தரப் தமிழ்ப் போட்டிகள், நூலகம், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தத் திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதற்கான தேவைகளுக்காக, நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெஸ்ட் செஸ்டர் அகடமி அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும், விஜய் டிவி புகழ் அமுதவாணன் பங்கேற்ற நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. |
|
வண்ணமயமான உடையலங்காரத்துடன் குழந்தைகள் நடனம், நாடகம் எனப் பார்த்தவர்களின் மனதைக் கொள்ளை கொண்டனர். அமுதவாணன் நடனம் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்கினார். அவருடன் உள்ளூர்க்காரர்களும் பங்கேற்றனர்.
டிக்கெட்டுக்குப் பணம் வாங்காமல் 40 ஆயிரம் டாலர் நன்கொடை மூலமாகவே திரட்டியிருந்தார்கள். இதற்கான காசோலையை அமுதவாணன், மாலா கோபால் மற்றும் கங்கா வழங்க, தமிழ்ப் பள்ளிகளின் சார்பாக பாரதி கலைமன்றத் தலைவர் திருவேங்கடம் பெற்றுக்கொண்டார்.
தினகர், டெக்சஸ் |
|
|
More
NETS: பொங்கல்விழா விபா-சிகாகோ: பசித்த குழந்தைக்குச் சத்துணவு STF: திருக்குறள் போட்டிகள் டொரான்டோ: முதல் தமிழர் மரபு மாநாடு 2017 அட்லாண்டா: பொங்கல் விழா சான் அன்டோனியோ: பொங்கல் விழா சிகாகோ: பொங்கல் விழா
|
|
|
|
|
|
|